ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
774. ஸ்ரீ நிக்3ரஹாய நம:
ஶத்ரு தை3த்3யாதி3க3ளன்னு நிக்3ரஹ மாடு3வவனு
‘நிக்3ரஹ’ நமோ நினகெ3 மது4கைடப4 ஸம்ஹாரி
நிக்3ரஹிஸிதி3 ஆதி3 தை3த்ய ஹிரண்யகாதி3க3ள
ஹயக்3ரீவ வராஹ நரஸிம்ஹாதி ஸுக2ரூப
எதிரிகளை, தைத்யர்களை அழிப்பவனே. நிக்ரஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். மது, கைடப ஆகியோரை கொன்றவனே. ஆதி தைத்யனான ஹிரண்யகாதிகளை, முறையே ஹயக்ரீவ, வராஹ, நரஸிம்ஹ ரூபங்களால் அழித்தவனே. ஸுகரூபனே.
775. ஸ்ரீ வ்யக்3ராய நம:
ஸ்துதிப ப4க்தரிகா3னந்த3 தா3ன மாடு3வுத3ல்லி
அந்த:கரணமாள்ப ‘வ்யக்3ரனே’ நமோ ப4க்தபால
ஸ்தோத்ரு ராஜகெ3 வைவஸ்வத மனு பத3வனித்தி
ஸ்துதிஸித3 ப்ரஹ்லாத3கெ3 ராஜ்யாதி3 ஸௌபா4க்3யவித்தி
உன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பதில் முதல்வனே. வ்யக்ரனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்களை காப்பவனே. உன்னை வணங்கிய அரசனுக்கு, வைவஸ்வத மனு என்னும் பதவியை அளித்தாய். உன்னை வணங்கிய பிரகலாதனுக்கு ராஜ்யாதி அனைத்து ஸௌபாக்கியங்களையும் அளித்தாய்.
776. ஸ்ரீ நைகஶ்ருங்கா3ய நம:
அனேக ஶத்ரு ஹிம்ஸகனெ ‘நைகஶ்ருங்க3னே’ நமோ
அனேக தை3த்யரு ப3லிராஜனனுயாயிக3ளு
அனேக தை3த்யரு ஹிரண்யகஶிபு தத்ப்3ருத்யரு
அனேக ஶத்ருஹா வடு நரஹரி கிருஷ்ணராம
அனேக எதிரிகளை கொன்றவனே. நைகஸ்ருங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். அதில் பல தைத்யர்கள், பலி ராஜனின் சேவகர்களாக இருந்தவர்கள். பல தைத்யர்கள் ஹிரண்யகசிபுவின் நண்பர்கள். இவ்வாறான பல தைத்யர்களை, வாமன, நரசிம்ம, கிருஷ்ண, ராம என்னும் பல அவதாரங்களை எடுத்து அழித்தவனே.
***
No comments:
Post a Comment