ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
792. ஸ்ரீ து3ராவாஸாய நம:
ஸ்வகு3ருஸ்த2 பரமகு3ருஸ்த2 வாயுஸ்த2 நின்னன்ன
அகளங்க ஆத3ர ப4க்தியிம் ஸ்துதிஸதே3 எஷ்டே
அக்கரதி3 ப3ஹுயத்ன மாடி3த3ரு நின்ன ப்ரஸ
ந்னீகரிஸலு அஶக்ய அந்தா ‘து3ராவாஸ’ நமோ
குருவின் அந்தர்யாமியான, பரமகுருவின் அந்தர்யாமியான, வாயுவின் அந்தர்யாமியான உன்னை அபாரமான பக்தி, மரியாதைகளுடன் வணங்காமல், எவ்வளவு அக்கறையுடன், மிகவும் முயற்சி செய்தாலும், உன்னுடைய தரிசனத்தை பெறுவது முடியாது. அத்தககைய துராவாஸனே உனக்கு என் நமஸ்காரங்கள்.
793. ஸ்ரீ து3ராரிக்4னே நம:
விப்ரத்3விட் கு3ருத்3விட் ஸுரத்3விட் இந்த2 ஶத்ரு
பரிபரி ப2ல ஸாத4ன எஷ்டே மாடி3த3ரூனு
நிராஸகெ3ய்து3 நிரோதி4ஸுவி ‘து3ராரிஹ’ நமோ
ஶரணு ஸத்யத4ர்ம ப்ரிய அஸத்ய அத4ர்மஹா
பிராமணர்கள் மூலமாக, குருவின் மூலமாக, தேவர்களின் மூலமாக எதிரிகள் பற்பல ஸாதனைகளை எவ்வளவு செய்தாலும், அவற்றை நிராகரித்து, புறக்கணிக்கிறாய். துராரிஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்ய தர்மத்தை விரும்புபவனே. அஸத்ய அதர்மத்தை அழிப்பவனே.
794. ஸ்ரீ ஶுபா4ங்கா3ய நம:
ஶுப4பு3த்தி4 ப்ரேரிஸுவ ‘ஶுபா4ங்க3னே’ நமோ எம்பெ3
ஶோப4னதம அங்க3க3ளுள்ள ஆனந்த3மயனு
ஹே ப4க3வான் நினகு3 நின்னங்க3க3ளிகு3 பே4த3வில்ல
ஸுப3ல ஞானானந்தா3தி3 ஸம்பூர்ணவு ஸதா3 நிர்தோ3ஷ
நற்புத்தியை அருள்பவனே. ஷுபாங்கனே. உனக்கு என் நமஸ்காரங்கள். மங்களங்களை தரும் அங்கங்களை கொண்டவனே. ஆனந்தமயனே. ஹே பகவானே, உனக்கும் உன் அங்கங்களுக்கும் பேதம் இல்லை. நற்பலன்களை அருள்பவனே. ஞானானந்தாதி குணங்கள் ஸம்பூர்ணமாக உன்னிடம் இருக்கின்றன. எப்போதும் நிர்தோஷமாக இருப்பவனே.
***
No comments:
Post a Comment