ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
780. சதுர்வ்யூஹாய நம:
யக்3ஞோபயோகி3 சரு புரோடா3ஶ ஸோம ஜராதி3
தி3வ்யவஸ்து ஸமர்ப்பகவாத3வுக3ளுள்ளவனு
யக்3ஞக்கெ ஸ்வாமி நீனு ‘சதுர்வ்யூஹ’ நமோ நினகெ3
மாயேஶ ஜயாபதி க்ருதிகாந்த ஶாந்திரமண
யக்ஞங்களை செய்பவன், சரு, அன்னம், பாயசம், ஆகிய திவ்யமான வஸ்துகளை சமர்ப்பிக்கின்றனர் அத்தகைய யக்ஞத்திற்கு ஸ்வாமி நீயே. சதுர்வ்யூஹனே உனக்கு என் நமஸ்காரங்கள். மாயேஷனே. ஜயாபதியே. க்ருதியின் தலைவனே. ஷாந்தி ரமணனே.
781. ஸ்ரீ சதுர்க3தயே நம:
ஸஞ்சாரஶீல அஶ்வக3ளிந்த3 ஸெளெயல்படு3வ
மெச்சப3ஹுதா3த3 ரத2வுள்ள ‘சதுர்க3தி’ நமோ
ஸோசித கர்ம ஹரி அர்ப்பணாபு3த்3தி4யிம் ப4க்தரு
ஆசரிஸி கர்தாஹரிய ப4ஜிஸெ க3தி ஈவி
சஞ்சாரம் செய்வதில் வல்லமை படைத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே. அற்புதமான ரதத்தை கொண்டவனே. சதுர்கதயே. உனக்கு என் நமஸ்காரங்கள். இருக்கும் பொருட்களை கொண்டு திருப்தியுடன், தங்களின் கர்மங்களை ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்யும் பக்தர்கள், கர்தாவாகிய உன்னை வணங்கினால், நீ அவர்களுக்கு தக்க கதியை அளிக்கிறாய்.
782. ஸ்ரீ சதுராத்மனே நம:
பேகாத3 ப்ரார்த்த4னீய புத்ராதி3தா3தா ‘சதுராத்மா’
பா3கி3 ஶிர நமோ எம்பெ3 ஸந்தான கோ3பாலகிருஷ்ண
ஸ்ரீகரனே ஆத்மாsந்தராத்ம பரமாத்ம ஞானாத்ம
நால்குவித4 புருஷார்த்த2 ஈவ சதுராத்மா ஸ்வாமி
இஷ்டார்த்தங்கள், புத்ர முதலான இஷ்டங்களை அளிப்பவனே. சதுராத்மனே. உன்னை தலைகுவித்து வணங்குகிறேன். ஸந்தான கோபாலகிருஷ்ணனே. ஸ்ரீகரனே. ஆத்மா, அந்தராத்மா, பரமாத்மா, ஞானாத்மா ஆகிய நான்கு வித புருஷார்த்தங்களை அளிப்பவனே. சதுராத்மனே. ஸ்வாமியே.
***
No comments:
Post a Comment