ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
771. ஸ்ரீ த்3யுதித4ராய நம:
ப3லஞானானந்தா3தி3 கு3ணத4ர ‘த்3யுதித4ரனே’
காலிகெ3ரகி3 நமோ ப3லஞானானந்தா3தி3தா3த
குவலயாந்தரிக்ஷ ‘த்3யு’ மொத3லாத3 ஸர்வலோக
லீலெயிந்த3 த4ரிஸிருவி ப்ரோஜ்வல சக்ரபாணி
பல, ஞான, ஆனந்த ஆகிய மூன்று குணங்களை அபாரமாக கொண்டவனே. உன் பாதங்களில் விழுந்து வணங்குகிறேன். உன் பக்தர்களுக்கு பல, ஞானானந்தாதி ப்ரதனே. பூமி, அந்தரிக்ஷ முதலான அனைத்து உலகங்களையும் நீ உன் லீலையால் தரித்திருக்கிறாய். ஒளிர்பவனே. சக்ரபாணியே.
772. ஸ்ரீ ஸர்வஶஸ்த்ர ப்4ருதாம்வராய நம:
ஸர்வஜல வ்ருக்ஷாதி3க3ள த4ரிஸிருவ நதி3
பர்வதாதி3க3ளிகெ3 ஶ்ரேஷ்ட ‘ஸர்வஶஸ்த்ர ப்4ருதாம்வர:’
ஸர்வதா3 நமோ வாயுஸ்த2 ஆஶ்ரய எனகெ ஸ்ரீஶ
ஸர்வாஶ்ரய ‘அக்ஷராம்ப3ராந்தத்4ருதே’ எந்து3 ஸூத்ர
அனைத்து ஜல, மரங்களை தரித்திருப்பவனே. அவற்றைவிட வேறுபட்டவனே. சிறந்தவனே. ஸர்வஷஸ்த்ர ப்ருதாம்வரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். வாயுவில் அந்தர்யாமியாக இருப்பவனே. நீயே எனக்கு கதி. ஸ்ரீஷனே. அனைத்திற்கும் ஆதாரமே. ‘அக்ஷராம்பராந்தத்ருதே’ என்று ஸூத்ரம் உன்னை புகழ்கிறது.
773. ஸ்ரீ ப்ரக்3ரஹாய நம:
மஹத்வதி3ந்த3 ஸர்வோத்தமத்வதி3ந்த3 ஸ்வீகர்யனு
மஹாமஹிம நீ ‘ப்ரக்3ரஹ’ நமோ ஸதா3 நினகெ3
அஹர் நியாமக ஸூர்யாதி3 க்3ரஹக3ள ஸ்வாமி நீ
பி3ரம்மஶிவாதி3யிந்த3 ஸ்வீகர்ய உத்தமஸ்வாமி எந்து3
உன்னுடைய மகிமையால், ஸர்வோத்தமத்வத்தால் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறாய். மகாமகிமனே. ப்ரக்ரஹனே. உனக்கு என் நமஸ்காரங்கள். சூர்யாதி கிரகங்களின் நியாமகன் நீயே அவற்றின் ஸ்வாமியும் நீயே. பிரம்ம, ருத்ரர்களால் நீ சேவைகளை ஏற்றுக் கொள்கிராய். உத்தம ஸ்வாமி என்று போற்றப்படுகிறாய்.
***
No comments:
Post a Comment