ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
768. ஸ்ரீ ஸத்யமேத4ஸே நம:
ஸத்ய நிஜவாத3 கீர்த்தி ‘ஸத்யமேதா4’ நமோ நினகெ3
ஸத்யநித்ய அகளங்க மேதா4ஞான பூர்ண நீனு
ஸத்ய ஜக3த்விஷயஞான ஸதா3 நின்னல்லுண்டு
ஸத்யகாம ஸத்யஸங்கல்ப ஸத்யபாமா ரமண
உண்மையான கீர்த்தியை கொண்டவனே. ஸத்யமேதனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸத்யமான, நித்யமான, தோஷங்கள் அற்ற, நினைவு சக்தியை முழுமையாக கொண்டவனே. ஸத்யமான இந்த ஜகத்தின் விஷய ஞானம் உன்னில் எப்போதும் இருக்கிறது. நித்ய த்ருப்தனே. ஸத்ய ஸங்கல்பனே. ஸத்யபாமாவின் ரமணனே.
769. ஸ்ரீ த4ராத4ராய நம:
ஸ்ரீத4ர ‘த4ராத4ர’ நமோ நமோ நமோ நினகெ3
ஸ்ரீதத்வ நின்னல்லி ஓதப்ரோதவாகி3 இருவுது3
க்ஷிதிபா4ர ஹொத்திஹனு மந்த3ராத்3ரித4ர கூர்ம
சேதனாசேதன ஸர்வதா4ரகனாகி3ருதியோ
ஸ்ரீதரனே. தராதரனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீதத்வம் உன்னில் முழுமையாக இருக்கிறது. பூமியின் பாரத்தை தாங்கியவனே. மந்த்ர மலையை தாங்கியவனே. கூர்மனே. சேதனாசேதன என அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவனே.
770. ஸ்ரீ தேஜோவ்ருஷாய நம:
தேஜஸ்ஸு ஸுரிஸுவ ‘தேஜோவ்ருஷனே’ நமோ எம்பெ3
தேஜோரூபிக3ளு அர்காதி3க3ளிகெ3 உத்தமனு
ப்ரோஜ்வல உருக்ரமனே தேஜஸ்ஸிகெ3 தேஜஸ்விகெ3
ஹ்ருஜ்யோதி ஆகாஶ நாம பி3ரம்மபுரவேஶ்ம ஸம்ஸ்த2
தேஜஸ் அளிப்பவனே ‘தேஜோவ்ருஷனே’ உனக்கு என் நமஸ்காரங்கள். தேஜோ ரூபிகளான, சூரியாதிகளைவிட உத்தமன் நீயே. ஒளிர்பவனே. தேஜஸ்ஸிற்கு தேஜஸ்ஸினை அருள்பவனே. இதயத்தில் ஜோதியாக இருப்பவனே. ஆகாஷனே. பிரம்மபுரத்தில் நிலைத்திருப்பவனே.
***
No comments:
Post a Comment