ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய
ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய
கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்
எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
765. ஸ்ரீ ஸுமேத4ஸே நம:
ஸ்வரூபத: உத்தமவாத ஸித்3தி4யுள்ள ‘ஸுமேதா4’
ஶிரபா3கி3 நமோ எம்பெ3 யோக்3ய ஸர்வஸித்3தி4தா3த
பரிபூர்ண அகளங்க ஶோப4னோத்தம மேத4வான்
ஹரியே யக்3ஞக்கெ ஸ்வாமி யக்3ஞபு3க் யக்3ஞோவை ஹரி:
ஸ்வரூபத்தினால் உத்தமமான ஸித்திகளை கொண்டவனே. ஸுமேதஸே உனக்கு என் நமஸ்காரங்கள். அவரவர்களுக்கு யோக்யமான ஸித்திகளை அளிப்பவனே. பரிபூர்ணனே. தோஷங்கள் அற்றவனே. மங்களங்களில் உத்தமமானவனே. ஸர்வக்ஞனே. ஹரியே. யக்ஞங்களுக்கு ஸ்வாமியே. யக்ஞங்களில் பலன்களை ஏற்றுக் கொள்பவனே. யக்ஞங்களால் பூஜிக்கப்படுபவனே. ஸ்ரீஹரியே.
766. ஸ்ரீ மேத4ஜாய நம:
யக்3ஞதி3ம் அபி4வ்யக்த ‘மேத4ஜனே’ நமோ நினகெ3
ஸம்யக் ஆராதி3த வ்ரதரூப யக்3ஞதி3ந்த3 நீனு
வ்யக்தனாதி3 புத்ரத்வேன அதிதி தே3வகீயர்கெ3
யக்3ஞ பூஜன ப4ஜன த்4யானாதி3 ஸாத4ன மேத4
யக்ஞங்களால் தரிசனம் அளிப்பவனே (தோன்றுபவனே). மேதஜனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தர்கள் செய்யும், விரத ரூபமான யக்ஞங்களால் நீ தோன்றுகிறாய். அதிதி, தேவகி ஆகியோருக்கு புத்திரனாக அவதரித்தவனே. யக்ஞ, பூஜை, பஜனை, தியானம் ஆகிய ஸாதனங்களால் தோன்றுபவனே.
767. ஸ்ரீ த4ன்யாய நம:
தீ3ப்தவாத3 ஸோமஸ்த2 ‘த4ன்ய’ நமோ நமோ நினகெ3
ப4க்திரஸ உக்குத்தா நின்னன்ன ப4ஜிஸுவவரன்ன
த4ன்யராகி3 மாடு3வி நீனு ஸதா3 ஆப்தகாம
பு3த்3தி4 ப்ரகாஶவித்து அபரோக்ஷஞான கொடு3வி
சந்திரனில் இருந்து ஒளி கொடுப்பவனே. தன்யனே உனக்கு என் நமஸ்காரங்கள். பக்தியுடன் மெய்மறந்து உன்னை பஜிப்பவர்களை நீ தன்யனாக ஆக்குகிறாய். எப்போதும் நித்ய த்ருப்தனே. புத்திக்கு ஒளி கொடுத்து, கடைசியில் அபரோக்ஷ ஞானத்தை அருள்பவனே.
***
No comments:
Post a Comment