Friday, September 29, 2023

#272 - 804-805-806 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***  

804. ஸ்ரீ ஸுந்தா3 நம:

2ந்த3 ஒள்ளே வஸ்து 4 த்3ரவ்ய ரத்னாதி33ளிந்த3

ஸுந்த3நமோ எம்பெ3 ஸிந்து4ஜாபதி ஸ்ரீகர ஸ்ரீ ஹ்ரீ

யிந்தொ33கூடி3 3ருடோ3பரி குளிது ஶங்க2 நிதி4

பத்4 நிதி4 த்3ரவ்யகொடு3 ஹஸ்தக3ளிந்தொ3ப்புவி 

மிகச் சிறந்த வஸ்துகளான தன, த்ரவ்ய, ரத்னங்களை கொண்டவனே. ஸுந்தனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனே. ஸ்ரீகரனே. ஸ்ரீலட்சுமிதேவியுடன் சேர்ந்து, கருடன் மேல் அமர்ந்து, சங்கு, பத்ம ஆகியவற்றை பிடித்த கைகளால் பக்தர்களை அருள்கிறாய். 

805. ஸ்ரீ ரத்னனாபா4 நம:

ஸ்தோத்ரமாடு3 4க்தஸ்துதி ஶ்ரவண மாடு3வி நீ

ரத்னனாப4னே நமோ ஆதி3கவி த்வத் புத்ர ஸ்தோத்ர

முத3தி3ந்த3 கேளி நீ போ4தி3ஸிதி3 பா43வதவ

வாதவாணி ருக்ஸாமஸ்துதி கேள்வி ஜக3த்ஹிதக்ருத் 

ஸ்தோத்திரம் செய்யும் பக்தர்களின் ஸ்துதிகளை நீ கேட்கிறாய். ரத்னனாபனே உனக்கு என் நமஸ்காரங்கள். ஆதிகவியான, உன் புத்திரனான, பிரம்மனின் ஸ்தோத்திரத்தினை நீ மகிழ்ச்சியுடன் கேட்டு, அவருக்கு பாகவதம் உபதேசம் செய்தாய். ருக் ஸாம முதலான வேத ஸ்துதிகளை நீ கேட்கிறாய். உலகத்தை காப்பவனே. 

806. ஸ்ரீ ஸுலோசனாய நம:

ஸுகா2தி3 ஸாத4 3ர்ஶகஸுலோசனனே நமோ

ஸ்ரீக்ருஷ்ண வேதவ்யாஸ 3த்த கபில ஹயக்3ரீவ

ஸுக2 ஶோப4 கரானந்த3மய ஸுலோசனவான்

அகளங்கஶாஸ்த்ர யோனித்வாத் ஈக்ஷதேனாs ஶப்34ம் 

சுகம் முதலான சாதனங்களை அளிப்பவனே. ஸுலோசனனே. உனக்கு என் நமஸ்காரங்கள். ஸ்ரீகிருஷ்ணனே. வேதவ்யாஸனே. தத்தனே. கபிலனே. ஹயக்ரீவனே. ஸுக ஷோபனனே. ஆனந்தமயனே. அழகான நேத்ரங்களை கொண்டவனே. யதார்த்த சாஸ்திரங்களை அருளியவனே. ஓம் ஈக்‌ஷதேனாஷப்தம் ஓம் என்னும் ஸூத்திரத்தால் போற்றப்படுபவனே. 

***


No comments:

Post a Comment