Tuesday, September 5, 2023

#254 - 750-751-752 நாமங்கள் - ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்யம்

ஸ்ரீபிரஸன்ன ஸ்ரீனிவாஸ தாஸர் இயற்றிய

ப்ரஸன்ன ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ர பாஷ்ய

கன்னட கிருதியின் தமிழ் அர்த்த விளக்கங்கள்

எழுதுபவர் : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

750. ஸ்ரீ ஸுவர்ணவர்ணாய நம:

4க்தர்கெ3 ஈவுதகெ3 ஸ்வர்ணேச்சாவந்தனாகி3ருவி

ஸ்ரீத3னேஸுவரணவர்ணநமோ எம்பெ3 லக்ஷ்மீபதே

வேத3 ப்ரதிபாத்3 ஹரிருக்மவர்ண நீ நின்னன்ன

4க்தனிகெ3 காணிஸி யுக்தகாலதி3 மோக்ஷவீவி 

பக்தர்களுக்கு அருள்வதற்காக ஸ்வர்ணங்களை கொண்டிருக்கிறாய். ஸ்ரீதரனே. ஸுவர்ணவர்ணனே உனக்கு என் நமஸ்காரங்கள். லட்சுமிதேவியின் தலைவனே. வேதங்களால் போற்றப்படுபவனே. தங்கமயமானவனே. உன் பக்தர்களுக்கு நீ உன்னை காட்டிக் கொண்டு, தக்க காலத்தில் அவனுக்கு மோட்சத்தை அருள்கிறாய். 

751. ஸ்ரீ ஹேமாங்கா3 நம:

3மனஶீல வேக3வுள்ள ஹயக3ளிந்த3 போப

ரமாபதேஹேமாங்க3நமோ எம்பெ3 ஸௌந்த3ர்யஸார

ஸுமனோஹரவாத3 சாமீகர வபுஷ நீனு

அமல ஸுபூர்ணஞானக்ரியா ஸாமர்த்2யவுள்ளவ 

வாயுவேகத்தில் செல்லும் குதிரைகளில் செல்பவனான ஸ்ரீரமாதேவியின் தலைவனே. ஹேமாங்கனே. உனக்கு என் நமஸ்காரங்கள். அழகானவனே. மனதிற்கு இன்பம் தரும் அழகான வடிவம் கொண்டவன் நீ. குறைகள் அற்றதான, முழுமையான ஞான, க்ரியா ஆகிய சாமர்த்தியங்களை கொண்டவன் நீ. 

752. ஸ்ரீ வராங்கா3 நம:

வரணீய ஶ்ரேஷ்ட ஆத3 ஸந்ததி ஹரடு3வந்த

வராங்க3நமோ பி3ரம்ம ஶிவ ஶேஷ கருட3வந்த்3

உத்க்ருஷ்ட ஸுவிமல கரசரணாத்3யங்க33ளு

ஸுக2ஞான 3லாதி3 பூர்ணவு பே43 இல்லத3வு 

உன்னை வர்ணிப்பவர்களான சிறந்தவர்களான உன்னுடைய பக்தர்களால் போற்றப்படுபவனான வராங்கனே உனக்கு என் நமஸ்காரங்கள். பிரம்ம, சிவ, சேஷ, கருடர்களால் வணங்கப்படுபவனே. சிறந்ததான, அழகான, கை, கால் ஆகிய அங்கங்களை கொண்டிருக்கிறாய். சுக, ஞான, பல ஆகியவை உன்னிடம் பூரணமாக இருக்கின்றன. இவற்றில் எவ்வித பேதங்களும் இல்லை. (உன்னுடைய அவதாரங்களில், இவை எவற்றில் பேதங்கள் இல்லை). 

***


No comments:

Post a Comment