Saturday, June 4, 2022

[பத்யம் #27] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #27] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #27]

ஶ்ரத்தெ3யிந்த3லி ஶிலெய நம்பு3

ஶுத்34 மனதி3ம் பூஜெகெ3ய்தொ3டெ3

4த்ரதி3ந்த3லி பூர்ணவாஹுது3 மனத3 3யகெக3ளு |

ஶுத்34வித்4யெயனீவ கு3ருக3

பு3த்தி4யிந்த3லி திளிது3 ஸேவிஸெ

பத்மனாப4 ப்ரீதிபடெ3வுத3கேனு ஸம்ஷயவு ||27 

ஷ்ரத்தெயிந்தலி - மிகவும் பக்தி மரியாதையுடன்; ஷிலெய நம்புத - சாலிகிராம, சிலைகளை நம்பியவாறு; ஷுத்த மனதிம்; சுத்தமான மனதினால்; பூஜெகெய்தொடெ - பூஜை செய்தால்; மனத பயகெகளு - மனதின் விருப்பங்கள்; பத்ரதிந்தலி - முழுமையாக; பூர்ணவாஹுது - முழுமையடையும்; ஷுத்த வித்யெயனீவ - சரியான கல்வியை கற்றுக் கொடுக்கும்; குருகள - குருகளை; புத்தியிந்தலி திளிது - தன் புத்தியினால் அறிந்து; ஸேவெஸெ - வணங்கினால்; பத்மனாபன - ஸ்ரீஹரியின்; ப்ரீதிபடெவுதகேனு ஸம்ஷயவு - அன்பினைப் பெறுவதில் என்ன சந்தேகம்?. 

பூஜை மற்றும் குரு ஸேவையின் பலன்களை இங்கு விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

மிகவும் பக்தி மரியாதையுடன், சாலிகிராம / ஷிலா மூர்த்திகளை சுத்தமான மனதினால் பூஜை செய்தால், மனதின் விருப்பங்கள் முழுமையாக முழுமையடையும். அத்துடன், உத்தமமான கல்வியை கற்றுக் கொடுக்கும் குருகளை தன் புத்தியினால் அறிந்து, வணங்குபவன், ஸ்ரீஹரியின் அன்பினைப் பெறுகிறான் என்பதில் என்ன சந்தேகம்? 

ப்ரதிமெ ஷாலிகிராம கோப்யாகத அதிதி -என பகவந்தனின் விபூதி ரூபங்கள் இருக்கும் இடங்களை பட்டியலிடும் ஸ்ரீஜகன்னாததாசர், அதில்ப்ரதிமை, ‘சாலிகிராமம் ஆகியவையும் இருப்பதால், தினமும் சுத்தமான மனதினால், பக்தி மரியாதையுடன், சரியான அனுசந்தானத்துடன் சாலிகிராம பூஜை செய்தால், அவனின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறுகின்றன. 

மேலும்,

சாலிகிராம ஷிலா ஸ்பர்ஷம் யே குர்வந்தி தினே தினே |

வாஞ்சந்தி கர ஸ்பர்ஷம் தேஷாம் தேவா: ஸவா ஸவா: ||

(கிருஷ்ணாம்ருத மஹார்ணவ #183) 

தினமும் சாலிகிராமத்தை தொடுபவனின் கைகளை, தேவதைகளே தொடுவதற்கு விரும்புகிறார்கள் என்று ஸ்ரீமதாசார்யர் கூறியிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

முகுந்த பக்த்யை குருபக்தி ஜாயை - என்று மத்வவிஜயம் சொல்கிறது. குருபக்தி மூலமாகவே, ஹரிபக்தியை அடைய முடியும் என்கிறார் நாராயண பண்டிதாசார்யர். 

ஹரிகருணெ எம்பந்த கீலிகை தொரகிது குருகருணெ எம்பந்த ஷக்தியிந்த - என்று ஸ்ரீவிஜயதாஸர் தனது கிருதியில் சொல்கிறார். 

இது போன்ற உதாரணங்களால், சாலிகிராம பூஜையின் சிறப்பினையும், குரு ஸேவையின் சிறப்பினையும் விளக்கிவிட்டு, அடுத்த பத்யத்தில் இதையே மேலும் சொல்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

***


No comments:

Post a Comment