Sunday, June 19, 2022

[பத்யம் #39] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #39] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #39]

பா4ஷெயபி4மானத3லி கன்னட3

தூ3ஷணெய கைகொ3ண்டு3 ஹலவரு

மாஸிருவ மனதி3ந்தv தம்மனு தாவெ பே3ர்படி3ஸி |

வ்யாஸகூடதி3 ஶ்ரேஷ்டராவெம்

தா3ஶிஸுத பே43வனு ப3கெ3யுவ

தோvஷ கார்யதி3 மனவனெரகி3ஸி ப3ரிதெ33ளலுவரு ||39 

பாஷெயபிமானதலி - (சம்ஸ்கிருத) மொழியின் அபிமானத்தில்; கன்னட தூஷணெய கைகொண்டு -  கன்னட மொழியை தூஷித்தவாறு; ஹலவரு - பலர்; மாஸிருவ மனதிந்த - களங்கமுள்ள மனதினால்; தம்மனு தாவெ பேர்படிஸி - தங்களை தாங்களே வேறுபடுத்திக்கொண்டு; வ்யாஸகூடதி - வ்யாஸகூடத்தைவிட; ஸ்ரேஷ்டராவெந்து - (ஹரிதாஸ ஸாகித்யமானது) சிறந்ததா என்று; ஆஷிஸுத - கூறியவாறு; பேதவனு பகெயுவ - பேதத்தை சொல்லும்; தோஷ கார்யதி - கெட்ட செயல்களில்; மனவனெரகிஸி - மனதினை வைத்து; பரிதெ பளலுவரு - அதிகமாக நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்பர். 

ஹரிதாஸ ஸாகித்யமானது, ஸ்ரீமத்வரின் தத்வ ரகசியங்களையே விளக்குவதாக இருந்தாலும், புதியதாக எதையும் சொல்லாமல் இருந்தாலும், பலர் அதன் மேல் வெறுப்பு கொண்டிருக்கிறார் என்பதை இங்கு விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

சம்ஸ்கிருத மொழியின் அபிமானத்தில், கன்னட மொழியை தூஷித்தவாறு, பலர் தமது களங்கமுள்ள மனதினால், தாஸகூடமானது, வ்யாஸகூடத்தைவிட சிறந்ததா என்று கேட்டவாறு, இரண்டிலும் வேறுபாட்டைக் காட்டும் மனதினை வைத்து, அதிலேயே அதிகமான நேரத்தை செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.

***



No comments:

Post a Comment