Thursday, June 23, 2022

[பத்யம் #43] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #43] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #43]

ஸ்வச்சவாகி3ஹ தா3ஸகூடத3

ஹெச்சளவனரியதெ3லெ குஜனரு

மத்ஸரவ பvகெயுவரு ஸ்ரீ ஹரிதா3ஸரனு ஜரிது3 |

கொ1ச்சுவரு மைமரெது3 தம்மய

ஹுச்சு பாண்டி3த்யவனு ஸ்ரீஹரி

மெச்சனவஹேளனவ தன்னவரல்லி எம்பு33னு ||43

ஸ்வச்சவாகிஹ - இவ்வாறு பவித்ரமாக இருக்கும்; தாஸகூடத - தாஸகூடத்தின்; ஹெச்சளவனு - சிறப்பினை; அரியதலெ - அறியாமலேயே; குஜனரு - கெட்ட புத்தி கொண்டவர்கள்; ஸ்ரீஹரிதாஸரனு - ஸ்ரீஹரிதாஸர்களை; ஜரிது - திட்டி / புறக்கணித்துமத்ஸரவ பகெயுவரு - பொறாமையை காட்டுவார்கள்; தம்மய - தம்முடைய; ஹுச்சு பாண்டித்யவனு - அறியாமையை; மைமரெது - தன்னை அறியாமலேயே; கொச்சுவரு - வெளிப்படுத்துவார்கள்; தன்னவரலி - தன்னவர்களிடம் (தன் பக்தர்களிடம்); ஹேளவன - (செய்யப்படும்) அவமானத்தை; ஸ்ரீஹரி - ஸ்ரீஹரி; மெச்சனு - விரும்புவதில்லை; எம்புதனு - என்பதை; (மறந்து விடுவார்கள்).

இவ்வாறு பவித்ரமாக இருக்ககூடிய தாஸகூடத்தின் சிறப்பினை அறியாமலேயே, கெட்டபுத்தி கொண்டவர்கள், ஸ்ரீஹரிதாஸர்களை திட்டி, தங்களின் பொறாமையை காட்டுவார்கள். தங்களை அறியாமலேயே, தம்முடைய அறியாமையை வெளிப்படுத்துவார்கள். தன் பக்தர்களுக்கு இத்தகையவர்கள் செய்யும் அவமானத்தை, ஸ்ரீஹரி விரும்புவதில்லை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

தாள தன்னவரல்லி மாடு3

ஹேளனவ ஹெத்தை3ய்வ விது3ரன

ஆலயதி3 பாலுண்டு3 கு3ருபன மானவனெ கொண்ட3 ||(2-14)

தன் பக்தர்களிடம் அடுத்தவர்கள் காட்டும் அவமானத்தை / கேலியை, ஸ்ரீஹரி விரும்ப மாட்டான். ஆகையால், துரியோதனின் அழைப்பை நிராகரித்து, விதுரனின் வீட்டில் பால் உண்டான் ஸ்ரீகிருஷ்ணன் - என்கிறார் ஸ்ரீஜகன்னாததாஸர்.

ஹரி-தாஸர்களுக்கு செய்யப்படும் அவமானத்தை ஸ்ரீஹரியே தாங்குவதில்லை என்றபிறகு, வேறு யாரும் ஹரிதாஸர்களை அவமானம் செய்ய, ஹரிதாஸ ஸாகித்யத்தை புறக்கணிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்பது ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸரின் வாக்கு

***


No comments:

Post a Comment