[பத்யம் #48] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #48]
லஜ்ஜெ
வர்ஜிஸி முத3தி3 காலலி
கெ3ஜ்ஜெ
த4ரிஸுத கரதி3 தாளவ
ஹெஜ்ஜெ
நர்தனதி3ந்த3 பா3ரிஸுத்ஹரிய நாமவனு |
க3ர்ஜிஸுத
ஸஜ்ஜனர ஸத3னதி3
அர்ஜிஸித3னர்ப்பிஸுத
தி3னதி3ன
அப்3ஜப4வ
பிதனொலிமெ படெ3வுதெ3 தா3ஸலக்ஷணவு ||48
லஜ்ஜெ வர்ஜிஸி - வெட்கத்தை விட்டுவிட்டு; முததி - மகிழ்ச்சியுடன்; காலலி கெஜ்ஜெயெ தரிஸுத - காலில் சலங்கையை தரித்தவாறு; ஹெஜ்ஜெ நர்தனதிந்த - குதித்து நாட்டியமாடியவாறு; கரதி தாளவ - கையில் தாளத்தை பிடித்துக்கொண்டு; பாரிஸுத்த - வாசித்தவாறு; ஹரிய நாமவனு கர்ஜிஸுத - ஸ்ரீஹரியின் பெயரை உரக்க சொல்லியவாறு; தினதின - தினமும்; ஸஜ்ஜனர ஸதனதி - சஜ்ஜனர்களின் வீடுகளில் (சென்று); அர்ஜிஸிதனர்ப்பிஸுத - விரும்பியவற்றை வேண்டியவாறு (கோரிக்கைகளை விண்ணப்பித்தவாறு); அப்ஜபவ பிதனொலிமெ - பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரியின் தரிசனத்தை; படெவுதெ - பெறுவதே ; தாஸலக்ஷணவு - ஹரிதாஸ லட்சணம் ஆகும்.
வெட்கத்தை விட்டு, மகிழ்ச்சியுடன், காலில் சலங்கையை தரித்தவாறு, குதித்து நர்த்தனம் ஆடியவாறு, கையில் தாளத்தை பிடித்துக்கொண்டு, வாசித்தவாறு, ஸ்ரீஹரியின் பெயரை உரக்கச் சொல்லியவாறு, தினமும் ஸஜ்ஜனர்களின் வீடுகளுக்குச் சென்று, பெற்றவற்றை ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்தவாறு, பிரம்மதேவனின் தந்தையான ஸ்ரீஹரியின் தரிசனத்தைப் பெறுவதே ஹரிதாஸ லட்சணம் ஆகும்.
ஹரிதாஸன் என்பவன் யார் என்பதை ஸ்ரீவ்யாஸராயர் இந்தப் பாடலில் கூறுகிறார்.
க்ராஸகில்லதே போகி
பரர மனெகள பொக்கு
தாஸனெந்து துளஸி மாலெ தரிஸி
பேஸரில்லதெ அவர காடி பளலிஸுத
காஸுகளிஸுவ புருஷ ஹரிதாஸனே ||
தாஸரெந்தரெ புரந்தர தாஸரய்யா
யாயிவாரவ மாடி விப்ரரிகெ ம்ருஷ்டான்ன
ப்ரீயதலி தானொந்து கொடத லோபி
மாய ஸம்ஸாரதலி மமதெ ஹெச்சாகித்து
காயனவ மாடலவ ஹரிதாஸனே ||
தாஸரெந்தரெ புரந்தர தாஸரய்யா
மேலே உள்ள பத்யத்தில், இந்தப் பாடலில் ஸ்ரீவ்யாஸராயர் கூறியுள்ள விஷயங்களையே இங்கு ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் விளக்கியிருக்கிறார் என்பதை பார்க்கலாம். இதையே ஸ்ரீவிஜயதாஸரும் தமது ‘ஹரிதாஸ லட்சண ஸுளாதியிலும்’ சொல்லியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment