Saturday, June 18, 2022

[பத்யம் #38] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #38] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #38]

ஈ ஸுபத்34தி ரங்க3விட்டலோ

பாஸகரு தச்சிஷ்ய யதிவர

வ்யாஸமுனி ஹயவத3ன த3ய ஸத்பாத்ர மொத3லாகி3

லேஸு துரியாஶ்ரமதொ3ளிர்த3ரு

தோ3ஷவெணிஸத3லனுஸரிஸி கம

லேனங்கிததி3ந்த3 மெரெயுத ஜக3தி3 ஹரடி33ரு ||38 

ஸுபத்ததி - இந்த நல்வழியை (ஹரிதாஸ ஸாகித்யத்தை); ரங்கவிட்டலோ பாஸகரு - ரங்கவிட்டலனின் உபாஸகரான ஸ்ரீஸ்ரீபாதராஜர்; தச்சிஷ்ய யதிவர வ்யாஸமுனி - அவருடைய சிஷ்யரான ஸ்ரீவ்யாஸராஜர்; ஹயவதன தய ஸத்பாத்ர - ஹயவதனனின் கருணையைப் பெற்ற ஸத்பாத்ரரான ஸ்ரீவாதிராஜர்; மொதலாகி - ஆகியோர்; லேஸு - சிறந்ததான; துரியாஸ்ரமதொளிர்தரு - சன்யாச தர்மத்தில் இருந்தாலும்; தோஷவெணிஸதலெ - (ஹரிதாஸ ஸாகித்யத்தை) தோஷம் என்று எண்ணாமல்; அனுஸரிஸி - இதனை பின்பற்றி; கமலேஷனங்கிததிந்த - ஸ்ரீஹரியின் அங்கிதத்தினால்; ஜகதி - இந்த உலகில்; மெரெயுத - சஞ்சரித்து; ஹரடிதரு - இதனை பரப்பினர். 

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஹரிதாஸ ஸாகித்யத்தை, யதி த்ரயர்கள் எனப்படுபவர்களான, 1. ரங்கவிட்டலனின் உபாஸகரான ஸ்ரீஸ்ரீபாதராஜர்; 2. அவருடைய சிஷ்யரான ஸ்ரீவ்யாஸராஜர்; 3. ஹயவதனின் கருணையைப் பெற்றவரான ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் பின்பற்றத் துவங்கினர். தாங்கள் சன்யாச ஆசிரமத்தில் ஈடுபட்டு, பீடத்தில் இருந்தாலும், இந்த ஹரிதாஸ ஸாகித்யத்தை தோஷம் என்று எண்ணாமல் இதனை பின்பற்றி, ஸ்ரீஹரியின் அங்கிதத்தைக் கொண்டு, உலகெங்கிலும் இதனை பரப்பினர். 

ஸ்ரீமதாசார்யரின் தத்வங்களை உலகிற்கு எடுத்துக்காட்டி, ஹரிஸர்வோத்தமத்வத்தை நிலை நிறுத்தும் பணியில் சன்யாச ஆசிரமத்தை ஏற்று, சாம்ராஜ்ய பீடத்தில் இருந்தாலும், யதித்ரயர்களான ஸ்ரீஸ்ரீபாதராஜர், ஸ்ரீவ்யாஸராஜர் மற்றும் ஸ்ரீவாதிராஜர் ஆகியோர் ஹரிதாஸ ஸாகித்யத்தை எப்படி பின்பற்றி, பரப்பினர் என்று இங்கு விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர். 

இந்த மூன்று யதிகளும், கன்னடத்தில் பற்பல பத, பத்ய, ஸுளாதிகளை இயற்றி, மக்களிடையே ஞான, பக்தி, வைராக்கியங்களை பரப்பினர். பல அரிய தத்வங்களை, மிகவும் எளிய கன்னடத்தில் பத்யங்களாக இயற்றி, லயத்துடன் அதனை பாடியும் ஹரிதாஸ ஸாகித்யத்தை பரப்பியிருப்பதை நாம் அறிகிறோம். 

கலியுகத்தில் ஹரிதாஸ ஸாகித்யத்தின் சிறப்பினை விளக்கும் ஸ்ரீஸ்ரீபாதராஜரின் உகாபோகம் ஒன்று: 

த்யானவு க்ருதயுகதி யஜன யக்ஞவு த்ரேதாயுகதி

தானவாந்தக தேவதார்ச்சனெ த்வாபரயுகதி

மானவரிகெஷ்டு பலவோ அஷ்டு பலவு கலியுகதி

கானதலி கேசவ எனலு கைகொடிசுவனு ரங்கவிட்டலா || 


பிரார்த்தனா ரூபமாக ஸ்ரீவ்யாஸராஜரின் கிருதி ஒன்று:

ஜனும ஜனுமதல்லி கொடு கண்ட்ய ஹரியே ||||

அனிமித்த பந்து கிருஷ்ண தயதிந்தலெனகே ||அப|| 

மெரெவ ஊர்த்வபுண்ட்ர எரடாரு நாமவு

கொரளொளு துலசிய வனமாலெயு

சிரி ஷங்க சக்ர புஜதொளொப்புத நிம்ம

ஸ்மரிசுத்த ஹிக்குவ வைஷ்ணவ ஜனுமவ ||1||

 

ஹரியே சர்வோத்தம ராணி லகுமி பொம்ம

ஹரி இந்த்ராத்யமரரு தவ சேவகரு

வர தாரதம்ய பஞ்சபேத சத்யவெந்து

நெரெ பேளுவ வாயுமதத சுக்ஞானவ ||2||

 

சகல விபுதோத்தமரல்லி நம்ரதெயு

சுகதீர்த்தரலி குருபாவனெயு

சகல சுரரொடெய சிரிகிருஷ்ண நின்னல்லி

அகளங்கவாத நவவித பகுதியனு ||3||

 

ஸ்ரீவாதிராஜரின் உகாபோகம் ஒன்று:

 

நின்ன த்யானவ பக்திய கொடு

அன்யரலி விரக்தி கொடு

நின்ன நோடுவ யுக்திய கொடு

நின்ன பாடுவ பக்திய கொடு

நின்ஹத்தி பருவ சம்பத்திய கொடு

சித்ததி தத்வியாத க்ருத்யவ தோரோ

மத்தெ துதியலி எனகெ முக்திய கொடு

அத்தத்த மாடோ பவகத்தலெயெனகெ

முத்திதே ஹயவதன ||

***


No comments:

Post a Comment