[பத்யம் #36] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #36]
தே3வ
பா4ஷெயொளாதி3யலி ஸ்ரீ
ஸர்வக்3ஞர்ஹேளித3
தத்வஸாரவ
பா4வதி3ந்த3லி
க்3ரஹிஸி கன்னட3 பத்3ய பத3 ரசிஸி
கோவித3ரு
ஸத்ப4க்தி பூர்வக
ஸ்ரீவரன
நெரெ ந்ருத்ய கா3னதி3
ஸேவிஸுத வைராக்vய த4ரிபுதெ3 தாvஸபத்3த4தி1யு ||36
தேவ பாஷெயொளாதியலி - துவக்கத்தில், சம்ஸ்கிருதத்தில்; ஸ்ரீ ஸர்வக்ஞர் ஹேளித - ஸ்ரீமதாசார்யர் விவரித்த; தத்வஸாரவ - தத்வ நிர்ணயங்களின் ஸாரத்தை; பாவதிந்தலி க்ரஹிஸி - உண்மையான அர்த்தத்துடன் அதனை ஏற்றுக்கொண்டு; கன்னட பத்ய பத ரசிஸி - கன்னடத்தில் பத பத்யங்களை இயற்றி; ஸத்பக்தி பூர்வக - பக்தியுடன்; கோவிதரு - கற்றறிந்தவர்கள்; ஸ்ரீவரன - ஸ்ரீஹரியை; நெரெ - முழுமையாக சிந்தித்தவாறு; ந்ருத்ய கானதி - ஆடல், பாடல்களுடன்; ஸேவிஸுத - வணங்கியவாறு; வைராக்ய தரிபுதே - வைராக்கியத்தை தரிப்பதே; தாஸ பத்ததியு - ஹரிதாஸ பத்ததியாகும்.
ஹரிதாஸ பத்ததியின் லட்சணத்தை இங்கு விவரிக்கிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாஸர்.
ஸ்ரீமதாசார்யர் தனது தத்வ நிர்ணயங்களின் ஸாரத்தினை துவக்கத்தில் சம்ஸ்கிருதத்தில் கூறினார். யதார்த்த ஞானத்துடன் அதனை ஏற்றுக் கொண்டு, அதை அப்படியே கன்னடத்தில் பத பத்யங்களாக இயற்றி, கற்றறிந்தவர்கள் பக்தியுடன் ஸ்ரீஹரியை முழுமையாக சிந்தித்தவாறு, ஆடல் பாடல்களுடன் வணங்கியவாறு, வைராக்கியத்தை தரிப்பதே, ஹரிதாஸ பத்ததியாகும்.
ஏளு நாராயண ஏளு லட்சுமி ரமணா
ஏளு ஸ்ரீகிரியொடெய வெங்கடேஷ ||
என்னும் தேவரநாமாவில், ஸ்ரீபுரந்தரதாஸர் இவ்வாறு கூறுகிறார்.
தாஸரெல்லரு பந்து தூளிதர்ஷனகொண்டு
லேஸாகி தாள தண்டிகெய பிடிது |
ரிக் பாஷ்யத்தில், ஸ்ரீமதாசார்யர் கூறியிருக்கும் வாக்கினை அப்படியே கன்னடத்தில் ஸ்ரீபுரந்தரதாஸர் இங்கு சொல்லியிருக்கிறார் என்று பன்னஞ்செ திரு.கோவிந்தாசார்யர் அவர்கள் விளக்குகிறார்.
ரமந்தி பாம்ஸவோ யத்ர பாம்ஸுரம் பதமீரிதம் |
ஸமூடம் தத்ர விஷ்வம் ஹி பாம்ஸுவஜ்ஜ கதீபதே: ||
இந்த சராசராத்மக உலகம் அனைத்தும், அந்த விஷ்வ நாயகனான பகவந்தனின் பாதங்களில் ஒரு துகளைப் போல இருக்கிறது. அந்த உலகிற்கு இது பெருமைக்குரிய செய்தி ஆகும். இவ்வாறு, ‘தூளிதர்ஷன’த்தில் மொத்த பிரம்மாண்டமே அடங்கியிருக்கிறது என அறிய வேண்டும். நாம் அவனின் பாததூளி என்னும் அறிவைப் பெற்றால், இந்த தாஸத்வத்தின் தீக்ஷை திடமாகிறது.
மேலும், ஸ்ரீமகாலட்சுமி முதலான அனைவருமே ‘ஹரிதாஸர்களே’ ஆகின்றனர். அனைவரும் பகவந்தனின் சேவையை செய்கின்றனர் என்றும், பல ஹரிதாஸர்கள் தங்களுடைய கிருதிகளின் மூலம் விளக்கியிருக்கின்றனர்.
சத்ர சாமர வ்யஜன பர்யங்க பாத்ர ரூபதல்லி நிந்து
சித்த சரிதனாத ஹரிய நித்ய ஸேவெ மாடுதிஹளு
(ஏனு தன்யளோ லகுமி எந்த மான்யளோ)
***
No comments:
Post a Comment