Monday, June 27, 2022

[பத்யம் #47] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #47] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #47]

விதி4யமீரதெ3 பா3ஹ்யத3லி ஸ

ந்முத3தி3 த்3வாத3ஷ நாம முத்3ரெய

ஹது3ளதி3ந்தvலி த4ரிஸி தே3ஹத3 ரத2வலங்கரிஸி |

எதெ3யொளொப்பலு துளஸிமணிஸர

வத3னத3லி தா3ஸோஹவென்னுத

பதெ3பதெ3கெ3 சீருத்த குணிவுதெ3 தா3ஸலட்சணவு ||47

விதியமீரதெ - விதி நிஷேதங்களின்படி (சாஸ்திரங்களில் சொல்லியபடி); பாஹ்யதலி - (புற) தேகத்தில்; ஸன்முததி - புன்னகையுடன்; த்வாதஷ நாம முத்ரெய - 12 நாமங்களை; ஹதுளதிந்தலி - மகிழ்ச்சியுடன்; தரிஸி - தரித்து; தேஹத ரதவலங்கரிஸி - தேக ரதத்தினை அலங்கரித்து; எதெயொளு - இதயத்தில்; துளஸிமணிஸர - துளஸி மணி மாலையை; ஒப்பலு - தரித்து; வதனதலி - வாயில்; பதெபதெகெ - அடிக்கடி (எப்போதும்); தாஸோஹவென்னுத - நான் ஸ்ரீஹரியின் தாஸன் என்றவாறு; சீருத்த குணிவுதெ - கூவியவாறு குதிப்பதே; தாஸ லட்சணவு - ஹரிதாஸ லட்சணம் ஆகும்.

விதிகளில் சொல்லியபடி, புற தேகத்தில் த்வாதஷ நாம முத்திரைகளை மகிழ்ச்சியுடன் தரித்து, இந்த தேக ரதத்தினை அலங்கரித்து, மார்பில் துளஸி மணி மாலையை தரித்து, வாயில் எப்போதும் நான் ஸ்ரீஹரியின் தாஸன் என்றவாறு கூவியவாறு, குதிப்பதே ஹரிதாஸ லட்சணம் ஆகும்.

 மாதரிஷ்வனு தே3ஹரத2தொ3ளு

ஸுதனாகி3 ஸர்வகாலதி3

ஸ்ரீதருணி வல்லப4 ரதிகனெந்தரிது3 நித்யத3லி |

ப்ரீதியிந்த3லி போ1ஷிஸுத வா

தாதபாதி33ளிந்த3 அவிரத1

1னுவினொளு மமதெ1 பி3ட்டிஹனவனெ மஹயோகி3 ||(5-25)

இந்த ஸாதன ஷரீரத்தை பகவந்தன் அமரும் ஒரு திவ்ய ரதமாக அனுசந்தானம் செய்து, அலங்காரம் செய்ய வேண்டும் என்று ஹரிகதாம்ருதஸாரத்தில், ஸ்ரீஜகன்னாத தாஸர் கூறியிருக்கிறார். நாம் செய்யும் ஸ்னானம் அவனுக்கு செய்யும் அபிஷேகம்; நாம் செய்து கொள்ளும் அலங்காரம், அவனுக்கே செய்யும் அலங்காரம் என அனைத்தையும் நம்முள் இருக்கும் பகவந்தனுக்கே செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

 நரஜன்ம பந்தாக நாலிகெ இருவாக

கிருஷ்ணா எனபாரதெ

என்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர். எப்போதும் ஸ்ரீகிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருக்கலாமே என்று கேட்கிறார்

***


No comments:

Post a Comment