Monday, June 20, 2022

[பத்யம் #40] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #40]

நாரத3ரெ த4ரெகி3ளிது3 ஶாஸ்த்ரத3

ஸாரஸர்வஸ்வவனு கன்னட3

பூ4ரி ஸாஹித்யத3லி ஸார்த3ரு மான்வி கு3ருவரரு |

தா3ரி மோக்‌ஷக்கெ ஹரிகதாம்ருத

ஸார வித்3வஜ்ஜனகெ தத்வா

கா3ர ரசிஸிரெ பா4ஷெ காரணமாடி3 ஜரியுவரெ ||40 

நாரதரெ தரெகிளிது - நாரதரே ஸ்ரீபுரந்தரதாஸராக இந்த பூமிக்கு வந்து; ஷாஸ்த்ரத ஸாரஸர்வஸ்வவனு - சாஸ்திரத்தின் சாரமான அனைத்தையும்; கன்னட பூரி ஸாஹித்யதலி - கன்னட சிறந்த சாகித்யத்தில்; ஸார்தரு - கொடுத்து அருளினார்; மான்வி குருவரரு - மான்வி குருகளான ஸ்ரீஜகன்னாததாசர்; தாரி மோக்ஷக்கெ - மோட்சத்திற்கு வழிகாட்டியாக; ஹரிகதாம்ருதஸார - ஹரிகதாம்ருதஸாரத்தை; வித்வஜ்ஜனகெ - அறிஞர்களுக்கு; தத்வாகார ரசிஸிரெ - தத்வத்தின் ஸாரமாக இயற்றிக் கொடுத்தால்; பாஷெ காரணமாடி - கன்னட மொழி என்று காரணம் காட்டி; ஜரியுவரெ - அதனை புறக்கணிக்க முடியுமா?. 

ஏதோ ஒரு காரணம் காட்டி, இத்தகைய மோட்ச சாதனமான கன்னட ஹரிதாஸ ஸாகித்யத்தை புறக்கணிக்க முடியுமா என்று ஸ்ரீதாஸர் கேட்கிறார். 

நாரதரே ஸ்ரீபுரந்தரதாஸராக இந்த பூமிக்கு வந்து, தத்வ சாஸ்திரத்தின் ஸாரமான அனைத்தையும், கன்னடத்தில் நமக்குக் கொடுத்து அருளினார். அவரைத் தொடர்ந்து வந்த பலரும், பின்னர் வந்த ஸ்ரீஜகன்னாததாஸரும், மோட்சத்திற்கு வழிகாட்டியாக ஹரிகதாம்ருதஸாரத்தை நமக்கு இயற்றிக் கொடுத்தார். இப்படியான அற்புத கிரந்தங்கள் இருக்கையில், அவற்றை கன்னட மொழி என்று காரணம் காட்டி புறக்கணிக்க முடியுமா?. 

நாரத3னெ தா 3ந்து3 தா4ருணிய ம்யாலெ அவ

தாரவனு தா மாடெ3 இதரரிகெ3 எல்ல

பாரமார்த்தி2யலி உத்3தா4 மாடு3வனெந்து3

நாரத3ரெ புரந்த3 தா3ஸரெனிஸித3ரு ||14 

வெங்கடேஷன யாத்ரெகெ தாஸரு போதாக என்னும் கிருதியில் ஸ்ரீரகுநாத தீர்த்தர் - நாரதரே ஸ்ரீபுரந்தரதாஸராக அவதாரம் செய்து, அனைவரைக்கும் முக்தி மார்க்கத்தை காட்டுவேன் என்று கூறி, அதன்படியே செய்தார் - என்று பாடியிருக்கிறார். 

கன்னடத்தின் சிறப்பினையும், அதில் உள்ள கிருதி / கிரந்தங்களின் சிறப்பினையும், இந்த கிருதியின் துவக்க பத்யங்களிலேயே பார்த்திருக்கிறோம். ஆகவே அவற்றை திரும்ப இங்கே கொடுக்கவில்லை.

***


No comments:

Post a Comment