[பத்யம் #30] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #30]
ஸிரி புரந்த3ர விட்டலாங்கித
கு3ருவரர த3யதி3ந்த3 தொ3ரகலு
ஹிரிய வைஷ்ணவதீ3க்ஷெ ஸ்ரீஹரிதா3ஸ்ய பா4க்யக்கெ
பரமபாத்ரனமாடி3 பொரெத3தி
கு3ருகருண கொண்டா3டி3 ஹிக்3கு3த
ஹருஷதி3ம் மன உப்3பி3 ஹரியனு பாடி3 பொக3ளித3ரு ||30
குருவரர தயதிந்த - தமது குருவின் அருளால்; ஸிரி புரந்தர விட்டலாங்கித - ஸ்ரீபுரந்தர விட்டலா என்னும் அங்கிதம்; தொரகலு - கிடைக்க; ஹிரிய - மிகச்சிறந்த; வைஷ்ணவதீக்ஷெ - வைஷ்ணவ தீக்ஷை; ஸ்ரீஹரிதாஸ்ய - ஸ்ரீஹரிதாசன் ஆகும்; பாக்யக்கெ - பாக்கியத்திற்கு; பரமபாத்ரனமாடி - மிகவும் ஏற்றவன் என்று நினைத்து ; பொரெத - கொடுத்த; அதி குருகருண - குருகளின் கருணையை; கொண்டாடி ஹிக்குத - மிகவும் மகிழ்ந்தவாறு கொண்டாடி; ஹருஷதிம் - மகிழ்ச்சியுடன்; மன உப்பி - மிகவும் பெருமையுடன்; ஹரியனு பாடி பொகளிதரு - ஸ்ரீஹரியை பாடிப் புகழ்ந்தார்.
குருவின் அருளால் அங்கிதத்தைப் பெற்ற ஸ்ரீபுரந்தரதாஸர், தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.
ஸ்ரீவ்யாஸராயரின் அருளால், ஸ்ரீபுரந்தர விட்டலா என்னும் அங்கிதம் கிடைத்தது. வைஷ்ணவ / தாஸ தீக்ஷை அளித்து தன்னை ஹரிதாஸன் ஆக்கிய குருகளின் கருணையைக் கொண்டாடி, மிகவும் மகிழ்ந்தவாறு, மிகவும் பெருமையுடன் ஸ்ரீஹரியை பாடிப் புகழ்ந்தார்.
நவகோடி நாராயணனாக இருந்தவர், ஒரு நொடியில் அனைத்தையும் துறந்து, ஸ்ரீவ்யாஸராயரை அடைந்து, ஹரிதாஸ தீக்ஷை மற்றும் அங்கிதத்தைப் பெற்று, ஸ்ரீஹரியின் ஸர்வோத்தமத்வத்தை / பக்தி மார்க்கத்தை பரப்புவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அங்கிதம் பெற்ற மகிழ்ச்சியில், ஸ்ரீபுரந்தரதாசர் பாடியது:
ஆதத்தெல்ல ஒலிதே ஆயித்து
நம்ம ஸ்ரீபதிய பாதத ஸேவெகெ ஸாதன ஸம்பத்தாயித்து ||
ஸ்ரீஹரி பாத ஸேவையை செய்வதற்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. இதுவரை நடந்தது அனைத்தும் நன்மைக்கே. நன்றாகவே நடந்திருக்கிறது என்றார். தண்டிகெ பெத்த, கோபாள புட்டி, துளஸி மாலை ஆகியவற்றை ஏந்துவதற்கு / தரிப்பதற்கு இதுவரை நான் வெட்கப்பட்டேன். கர்வம் கொண்டிருந்தேன். ஆனால், இன்று அவற்றிற்கான நேரம் வந்திருக்கிறது. இப்படியாக ஹரிஸேவை செய்வதற்காக என்னை மாற்றிய என் மனைவியின் குலம் நன்றாக செழித்து வளரட்டும் - என்று பாடினார்.
***
No comments:
Post a Comment