[பத்யம் #46] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #46]
வாஸவானுத ஹரிய தா3ஸர
தா3ஸ்ய சரிஸுவ தா3ஸ தா3ஸர
தா3ஸ தானெந்த3ரிது மனதொ3ளு மத3வ நூகு1த்த1 |
ஆஶிஸதெ3 மத்தன்ய தெ3ய்வவ
தே3ஶதே3ஶக3ளொடெ3ய ஸ்ரீஶனெ
லேஶ பி3ட3த3லெ காவனெம்பு3தெ3 தா3ஸலக்ஷணவு ||46
வாஸவானுத ஹரிய - இந்திரனால் வணங்கப்படும் ஹரியின்; தாஸர தாஸ்ய சரிஸுவ - தாஸரின் (வாயுதேவரின் / ஸ்ரீமதாசார்யரின்) தாஸ்யத்தை விரும்பும்; தாஸ தாஸர - யதி / ஹரிதாஸ பரம்பரையில் வந்தவர்களின்; தாஸ தானெந்தரிது - தாஸன் தான் என்பதை அறிந்து; மனதொளு - மனதில்; மதவ நூகுத்த - கர்வத்தை விலக்கியவாறு; மத்தன்ய தெய்வவ - வேறு எந்த தெய்வத்தையும்; ஆஷிஸதெ - வணங்காமல்; தேஷதேஷகளொடெய - இந்த அனைத்து உலகங்களின் தலைவனான; ஸ்ரீஷனெ - லட்ச்மீஷனே; லேஷ பிடதலெ - சிறிதும் விடாமல்; காவனெம்புதெ - நம்மைக் காப்பான் என்று நம்புவதே (சொல்வதே); தாஸ லக்ஷணவு - ஹரிதாஸ லட்சணம் ஆகும்.
ஹரிதாஸ்யத்தின் லட்சணத்தை மேலும் இந்த பத்யத்தில் மிகவும் அழகாக விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
இந்திராதி தேவர்களால் வணங்கப்படும் ஸ்ரீஹரியின் தாஸரான (வாயுதேவரின் / ஸ்ரீமதாசார்யரின்) தாஸ்யத்தை விரும்பும், யதி / ஹரிதாஸ பரம்பரையில் வந்தவர்களின் தாஸன் தான் என்பதை அறிந்து, மனதில் கர்வத்தை விலக்கியவாறு, வேறு எந்த தெய்வத்தையும் வணங்காமல் இந்த அனைத்து உலகங்களின் தலைவனான ஸ்ரீலட்சுமீஷனே நம்மைக் காப்பான் என்று திடமாக நம்புவதே தாஸ லட்சணம் ஆகும்.
ஸ்வோசித1 கர்மக3ளாசரிஸுத ப3லு நீசரல்லிகெ3 போ1கி3 யாசிஸதெ3
கே1சரவாஹ சராசர பந்த4க1 மோசக1னஹுதெந்து3 யோசிஸுதிப்புதே3 |1|
நம் வர்ணாசிரமத்திற்கேற்ப கர்மங்களை செய்தவாறு, ஸ்ரீஹரியைத் தவிர வேறு எந்த பிற தெய்வங்களிடமும் சென்று வேண்டாமல், நம் சம்சார பந்தனத்தை விலக்கத் தக்கவன் அவன் ஒருவனே என்பதை அறிந்து அவனை வணங்குவதே, நம் இந்த வாழ்க்கையின் சிறந்த அர்த்தமாகும் என்கிறார் ஸ்ரீஜகன்னாத தாஸர்.
ஸகலக்ரஹ பல நீனே ஸரஸிஜாக்ஷா
நிகிள வ்யாபக நீனே விஸ்வ ரக்ஷகா
என்று ஸ்ரீபுரந்தரதாஸர் ஹரி ஸர்வோத்தமத்வத்தை பல்வேறு உதாரணங்களுடன் இந்தப் பாடலில் விளக்குகிறார்.
இப்படியாக திடமான ஹரிபக்தியைக் கொண்டிருப்பதே தாஸ லட்சணம் ஆகும் என்கிறார் ஸ்ரீதாஸர்.
***
No comments:
Post a Comment