[பத்யம் #50] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #50]
தப்தமுத்3ரெய ஹரிய அங்கித
ப4க்தியிம் படெ3யத3லெ நித்யதி3
உத்தமத3 ஜப ஹோம தபக3ள மாடி3 ப2லவில்ல |
தை3த்யரவுக3ள ஸெளெவரல்லதெ3
மத்தெ ஸம்ஷய ஸல்ல த4ரிபுது3
சித்தஶுத்3தி4ய படெ3து3 பங்கஜனாப4னங்கிதவ ||50
தப்தமுத்ரெய - தப்த முத்திரையை; ஹரிய அங்கித - ஸ்ரீஹரியின் அங்கிதத்தை; பக்தியிம் படெயதலெ - பக்தியுடன், பெறாமல்; நித்யதி - தினம்தோறும்; உத்தமத - மிகச் சிறந்ததான; ஜப ஹோம தபகள - ஜப, ஹோம, தபங்களை; மாடி பலவில்ல - செய்து எவ்வித பலனும் இல்லை; தைத்யரவுகள - தைத்யர்கள் அவற்றை; ஸெளெவரு - இழுத்துக் கொள்வார்கள்; அல்லதெ - இதற்கு மாறாக; மத்தெ ஸம்ஷய ஸல்ல - வேறெந்த சந்தேகமும் இன்றி; சித்தஷுத்திய படெது - திடமான, தூய்மையான அறிவினைப் பெற்று; பங்கஜனாபனங்கிதவ - ஸ்ரீஹரியின் அங்கிதத்தை; தரிபுது - பெற வேண்டும்.
ஸ்ரீஹரியின் அங்கிதம் என்னும் தப்த முத்திரையை பெறாமல், தினம்தோறும் மிகச் சிறந்ததான ஜப, ஹோம, தபங்களை செய்து எவ்வித பலன்களும் இல்லை. தைத்யர்கள் அவற்றை இழுத்துக் கொள்வார்கள். இதற்கு மாறாக, எவ்வித சந்தேகமும் இன்றி, திடமான, தூய்மையான அறிவினைப் பெற்று, ஸ்ரீஹரியின் அங்கிதத்தைப் பெற வேண்டும்.
நானு நன்னது3 எம்ப3 ஜட3மதி
மானவனு தி3னதி3னதிv மாடு3வ
ஸ்னான ஜப தே3வார்ச்சனெயெ மொத3லாத3 கர்மக3ள |
தா3னவரு ஸெளெதொ3ய்வரல்லதெ3
ஸ்ரீனிவாஸனு ஸ்வீகரிஸ ம
த்தானெ பக்வ கபித்த2ப2ல ப4க்ஷிஸித3வோலஹுது ||(10-13)
நானே அனைத்தையும் செய்தேன் என்ற கர்வத்துடன் செய்த கர்மங்களை எதையும் ஸ்ரீஹரி ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக அத்தகைய கர்மங்களை தானவர்கள் இழுத்துக் கொள்கிறார்கள். அதாவது, நமக்கு எவ்வித பலன்களும் வருவதில்லை. இப்படி ஆகிவிடாமல் இருக்க, தக்க ஸாதனைகளை செய்து, மோட்ச பலன்களைப் பெறுவதற்கு ஒரு தக்க குருவை அணுகி, அங்கிதத்தை பெற வேண்டும் என்கிறார் ஸ்ரீரமா காந்த விட்டல தாஸர்.
***
No comments:
Post a Comment