[பத்யம் #31] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #31]
பா4ஷ்ய டீகாகர்தராதி3 அ
ஸேஷ யதிக3ண மத்4வஷாஸ்த்ரா
தே3ஷ பஸரிஸலேனு மாடி3த3ரெந்து3 ப1ரிகி1ஸலு |
வ்யாஸராயர தோ1ரெ புரந்த3ர
தா3ஸரனு முந்தூ3டி3 யதிவர
தோ1ஷதீர்த்த2ர மத1வனுத்3த4ரிஸித3ரு ஜக3தொ3ளகெ3 ||31
பாஷ்ய டீகாகர்தராதி - டீகாராயரே முதலான; அஸேஷ யதிகண - பற்பல யதிவர்யர்கள்; மத்வஷாஸ்த்ராதேஷ - மத்வ சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை; பஸரிஸலேனு மாடிதரெந்து - மக்களிடையே பரவச் செய்வதற்கு என்ன செய்தார்கள் என்று; பரிகிஸலு - பார்ப்பதற்கு / ஆராய்வதற்கு; வியாஸராயர தோரெ - வியாஸராயரின் சிஷ்யரான; புரந்தரதாஸரனு முந்தூடி - புரந்தரதாஸரை முன்வைத்து; ஜகதொளகெ - இந்த உலகில்; யதிவர தோஷதீர்த்தர - யதிவரரான மத்வாசார்யரின்; மதவனுத்தரிஸிதரு - மதத்தினை மேலும் பரவச் செய்தார்.
ஸ்ரீவ்யாஸராயர், ஸ்ரீபுரந்தரதாசரை முன்வைத்து, ஹரிதாஸ ஸாகித்யத்தின் மூலம் மத்வ சித்தாந்தக் கருத்தினை பரவச் செய்தார் என்று இந்த பத்யத்தில் கூறுகிறார் ஸ்ரீதாஸர்.
ஸ்ரீடீகாராயரே முதலான பற்பல யதிவர்கள், மத்வ சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மக்களிடையே பரவச் செய்வதற்கு (அவர்கள் டீகை, பாஷ்யம், டிப்பணிகள் மூலமாக) என்ன செய்தார்களோ, அவற்றை, ஹரிதாஸ ஸாகித்யத்தின் மூலமாக, மக்களிடையே மத்வ ஸித்தாந்தக் கருத்துக்களை / பக்தி மார்க்கத்தை பரவச் செய்வதற்கு, ஸ்ரீவ்யாஸராஜர், ஸ்ரீபுரந்தரதாஸரை முன்வைத்து, இந்த செயல்களை செய்தார்.
சம்ஸ்கிருதத்தில் இருந்த தத்வ ஸித்தாந்த ரகசியங்களை / விஷயங்களை, பத பத்ய ஸுளாதிகள் மூலமாக பாமர மக்களிடையே பரவச் செய்யலாம் என்று ஸ்ரீவ்யாஸராஜர் தீர்மானித்தார். அதையே அவர் ஸ்ரீபுரந்தரதாஸரை முன்வைத்து துவக்கி வைத்தார் என்பது இந்த பத்யத்தின் கருத்து.
வ்யாஸராயர திவ்ய பாத கமலவ ஸேவிஸுவ பகுதரிகெ - என்று துவங்கும் தேவரநாமாவில் ஸ்ரீகோபாலதாஸர் இந்த விஷயத்தை விளக்குகிறார்.
கு3ரு புரந்தரதாஸரு முந்தாத3ந்த4
பரிபரிய ஶிஷ்யருக3ள |
பெ3ரது3 ஸகல ஶாஸ்த்ர ஒரெது3 அவருக3ளன்னு
பரம ஶுத்த3ர மாடி3 பரலோக தோரிஸித3 ||5
அனைத்து சாஸ்திர ரகசியங்களையும், குருவான புரந்தரதாஸரே முதலான பல ஹரிதாஸர்களுக்கு விளக்கி, அவர்கள் மூலமாக அந்த தத்வங்களை மக்களிடையே பரவச் செய்தார், ஸ்ரீவ்யாஸராஜர்.
***
No comments:
Post a Comment