[பத்யம் #29] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #29]
ஹரிய அங்கிதவன்னு த4ரிஸுத
கு3ருவினிந்து3பதே3ஶ படெ3தவ
மருதமததொ3ளு த4ன்யத1மனா மனுஜனெந்தெ3னுத
வர புரந்தvர தா3ஸவர்யரு
கருணதvலி தோரித3ரு த4ரெயொளு
கு3ருயதி ஸ்ரீ வ்யாஸராயர பரம க்ருபெபடெ3து3 ||29
ஹரிய அங்கிதவன்னு தரிஸுத - ஸ்ரீஹரியின் அங்கிதத்தைப் பெற்று; குருவினிந்துபதேஷ படெதவ - குருவிடமிருந்து உபதேசம் பெற்றவன்; மருதமததொளு - ஸ்ரீமன் மத்வாசார்யரின் த்வைத மதத்தில்; தன்ய - தன்யன்; தமனா மனுஜனெந்தெனுத - அருள் பெற்ற மனிதன் என்று சொல்லியவாறு; வர புரந்தர தாஸவர்யரு - வர ஸ்ரீபுரந்தர தாசர்; குருயதி ஸ்ரீவ்யாஸராயர - குருவான யதிகளான ஸ்ரீவ்யாஸராயரின்; பரம க்ருபெபடெது - பரம அருளைப் பெற்று; தரெயொளு - இந்த உலகிற்கு; கருணதலி தோரிதரு - கருணையுடன் நிரூபித்தார்;
ஸ்ரீபுரந்தரதாஸர் தனது அங்கிதத்தைப் பெற்ற விதத்தினை இங்கு விவரிக்கிறார் ஸ்ரீதாஸர்.
குருவான யதி ஸ்ரீவ்யாஸராயரின் பரம கிருபையைப் பெற்று, ஸ்ரீபுரந்தரதாசர், ‘புரந்தரவிட்டலா’ என்னும் அங்கிதத்தை தரித்தவாறு, குருவிடமிருந்து உபதேசம் பெற்றவர், ஸ்ரீமன் மத்வாசார்யரின் த்வைத மதத்தில் மிகவும் தன்யன் எனப்படுகிறான் என்பதை இந்த உலகிற்கு நிரூபித்தார்.
அங்கிதவில்லத3 தே3ஹ நிஷித்த4
அங்கிதவில்லத3 காவ்ய ஸோபிசது
அங்கிதவில்லதெ3 இரபாரதெ3ந்து ச
க்ராங்கிதவனு மாடி3 என்னங்க3க்கெ1
பங்கஜனாப ஸ்ரீபுரந்தரவிட்டலன
அங்கிதவனகித்த3 குரு வ்யாசமுனிராயா
என்று குரு வியாசராஜரால் கொடுக்கப்பட்ட தப்த முத்ராவை தன் தேகத்தில் தரித்து, புரந்தரவிட்டலா என்னும் அங்கிதத்தைப் பெற்று, தாசதீக்ஷையைப் பெற்றதாக தெரிவிக்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர்.
வியாசராயர சரண கமல த3ர்ஷனவென
கே3ஸு ஜன்மத3 சுக்ருத1 ப4லதி தொ3ரகிது, என்ன
சாஸிர குலகோடி பாவனவாயிது
ஸ்ரீஷன ப4ஜிசுவத3க1தி3காரி நானாதே3
தோ3ஷ ரஹிதனாத3 புரந்தரவிட்டலன
தாசர கருணவு என்ன மேலே இரலாகி3
தன் பிறவிப்பயனால், இந்த பிறவியில் வியாசராஜரின் தரிசனத்தால், தமது மட்டுமல்ல தம் ஆயிரக்கணக்கான குலமும் (பரம்பரை) பவித்ரமடைந்தது என்கிறார். குரு உபதேசத்தினால் தாம் ஸ்ரீஹரியை பஜிப்பதற்கு தகுதி பெற்றேன் என்றும் கூறுகிறார். மேற்கண்ட இந்த இரு பத்யங்களினால் அங்கிதத்தின் மகத்துவம் புரிகிறது. அங்கிதம் இல்லாத தேகம் வீண். அங்கிதம் இல்லாத காவியம் புகழடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
***
No comments:
Post a Comment