[பத்யம் #34] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #34]
வேத3வாக்ய விரோத4வல்லத3
ஆதி3யிந்தி3ஹ ப்4ருத்யபா4வவு
ஸாத3னகெ மொத3லெந்து3 திளியுவ மந்த3ஜனததிகெ3 |
ஸ்வாது3 வசனதி3 போ3தி4ஸுத ஸ
ன்மோத3தி3ந்த3லி ஶுத்3த4 ஸத்வத3
கா3த4 தா3ஸத்வத3 ஸுதீ3க்ஷெய ஜக3தி3 நிலிஸித3ரு ||34
வேதவாக்ய விரோதவல்லத - வேத வாக்கியங்களுக்கு சம்மதமான; ஆதியிந்திஹ ப்ருத்யபாவவு - ஸ்ரீஹரியிடம் எப்போதும் இருக்க வேண்டிய தாஸத்வமே; ஸாதனகெ மொதலெந்து - ஸாதனைக்கு மிகவும் அவசியம் என்று; மந்தஜனததிகெ திளியுவ - மந்தபுத்திகளைக் கொண்ட மக்களுக்கு விளக்கும்; ஸ்வாது வசனதி - மிகவும் இனிமையான வாக்குகளில்; போதிஸுத - விளக்கியவாறு; ஸன்மோததிந்தலி - மிகவும் மகிழ்ச்சியுடன்; ஷுத்த ஸத்வத காத - சுத்த ஸத்வமான முறையிலான; தாஸத்வத ஸுதீக்ஷெய - தாஸத்வத்தின் தீக்ஷையை; ஜகதி நிலிஸிதரு - உலகில் பரப்பி நிறுவினார்.
ஸ்ரீபுரந்தரதாஸரின் கிருதிகளின் சிறப்பினை மேலும் இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.
வேத வாக்கியங்களுக்கு சம்மதமான, ஸ்ரீஹரியிடம் எப்போதும் இருக்க வேண்டிய தாஸத்வமே ஸாதனைக்கு மிகவும் அவசியம் என்று, மந்தபுத்திகளைக் கொண்ட மக்களுக்கு விளக்குவதற்காக, மிகவும் இனிமையான வாக்குகளில், மிகவும் மகிழ்ச்சியுடன் சுத்த ஸத்வமான முறையில், தாஸத்வத்தின் தீக்ஷையை உலகில் பரப்பி நிறுவினார் - ஸ்ரீபுரந்தரதாஸர்.
ஹரிதாஸ ஸாகித்யத்தை பரப்பியவர்களில் முதன்மையானவரான ஸ்ரீபுரந்தரதாஸரை, பின்னர் வந்த ஹரிதாஸர்கள் பலரும் போற்றிப் பாடியிருக்கின்றனர்.
ஸ்ரீபுரந்தரதாஸராய நிம்ம -- என்னும் கிருதியில் ஸ்ரீவெங்கட விட்டல தாஸர் இவ்வாறு பாடியிருக்கிறார்.
தத்வ ஶோத4னமாடி3 தத்வேஶரன திளிது3
தத்தத்காலகெ மாள்ப கர்மக3ளனா
உத்தமஶ்லோக புருஷோத்தமனிக3ர்ப்பிஸி
முக்தமார்க்க3வ பிடி3த3 அத்யந்த மஹா மஹிம ||5
ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்த தத்வங்களின் ரகசியங்களை நன்கு அறிந்து, அவற்றை மக்களிடையே பரப்பியவரான ஸ்ரீபுரந்தரதாஸரே, உங்களின் மகிமை அபாரமானது என்று போற்றியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment