Friday, June 10, 2022

[பத்யம் #33] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #33] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[பத்யம் #33]

பா33ராயணராதி3 வசனகெ1

மோத3தீர்த்த2 பா4ஷ்ய பங்க்திகெ3

பா3தெ4 லேவு பா3ரத3ந்த3தி3 தா3ஸஸாஹித்ய |

போ34கப்ரத3வாகி3 ரசிஸிரெ

ஓதி3 மொத3லிகெ3 பத3 ஸுளாதி3 ஸு

தா4தி3 கி3ரந்த ஸமன்வயிஸி பண்டி3தரு மோதி3புது3 ||33 

பாதராயணர - ஸ்ரீவேதவ்யாஸரின்; ஆதி வசனகெ - பிரம்ம ஸூத்ரங்களுக்கு; மோத தீர்த்தர பாஷ்ய பங்க்திகெ - அதற்கான ஸ்ரீமத்வரின் பாஷ்ய கிரந்தங்களுக்கு; பாதெ லேஷவு - எவ்வித பிரச்னைகளோ / குறைகளோ; பாரதந்ததி - வராதவாறு; தாஸ ஸாஹித்ய - ஹரிதாஸ ஸாகித்யமானது; போதகப்ரதவாகி - இவற்றை விளக்குவதாக; ரசிஸிரெ - இயற்றியிருக்கிறார். இதனை; பத ஸுளாதி - இந்த பத ஸுளாதிகளை; மொதலிகெ ஓதி - முதலில் படித்து அறிந்து; ஸுதாதி கிரந்த ஸமன்வயிஸி - ஸுதாதி கிரந்தங்களின் உள்ள விஷயங்களை இதனுடன் பொருத்திப் பார்த்து; பண்டிதரு மோதிபுது - பண்டிதர்கள் இதனை ஏற்றுக் கொள்ளட்டும். 

ஹரிதாஸ ஸாஹித்ய கிருதிகளின் சிறப்பினை, ஸ்ரீபுரந்தரதாஸரின் பத பத்யங்களின் மேன்மையினை இந்த பத்யத்தில் போற்றியிருக்கிறார் ஸ்ரீதாஸர். 

ஸ்ரீவேதவ்யாஸரின் பிரம்ம ஸூத்ரங்களுக்கு , அதற்கான ஸ்ரீமத்வரின் பாஷ்ய கிரந்தங்களுக்கு, எவ்வித பிரச்னைகளோ / குறைகளோ / முரண்களோ வராதவாறு, ஸ்ரீபுரந்தரதாஸர் தனது பத, பத்ய, ஸுளாதிகளை இயற்றியிருக்கிறார். கற்றறிந்த பண்டிதர்கள், முதலில் இவற்றை படித்து, இவற்றை ஸுதாதி கிரந்தங்களில் உள்ள விஷயங்களுடன் பொருத்திப் பார்த்து, பின் ஏற்றுக் கொள்ளட்டும். 

ருகுமணிபதிய ஸ்ரீபாதாரவிந்தகளு

பகுதியிந்தலி மன குஸுமதிந்த அர்ச்சிஸுவ

பகுதராயன நோடி தா க்ஷணகெ படதெ நா ||

(கங்களிகெ ஹப்பவாயிதய்யா

மங்களாத்ம புரந்தரவிட்டலன தாஸர கண்டு) 

என்று ஸ்ரீவ்யாஸராஜர் ஸ்ரீபுரந்தரதாஸரை புகழ்ந்து பாடியிருக்கிறார். 

ஸ்ரீபுரந்தர குருவர்ய என்று தொடங்கும் தேவர நாமாவில், ஸ்ரீகார்பர நரஹரிதாஸர், ஸ்ரீபுரந்தரதாஸரின் மகிமைகளை இவ்வாறு விளக்கியிருக்கிறார். 

காஶ்யாதி3 க்ஷேத்ர ஸஞ்சரிஸி பத3

ராஶி ஸுளாதி33 ரசிஸி ஸந்

தோஷ தீர்த்த2 மத1 3ளிஸி கு3ரு

வ்யாஸரிந்து3 பதே3 க்ரஹிஸி ஜக3தி3

பூ4ஸுர பாலக ஸ்ரீ கார்பர நர

கேஸரிக3தி ப்ரிய தா3ஸரெந்தெ3னிஸித3 ||3 

குரு வ்யாஸராஜரிடமிருந்து உபதேசம் பெற்று, ஸ்ரீமதானந்த தீர்த்தரின் மத தத்வங்களை பரப்புவதற்காககாசி முதலான க்ஷேத்திரங்களின் சஞ்சரித்து, பத பத்ய ஸுளாதிகளை இயற்றி, ஸ்ரீஷ கார்பர நரஹரியின் தாஸரான புரந்தரதாஸரே -- என்று புகழ்ந்திருக்கிறார்.

***



No comments:

Post a Comment