[பத்யம் #42] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #42]
வ்யாஸரொப்3ப3ரெ ஜக3கெ ஜீவர
ராஶி எல்லரு தா3ஸரெனிபரு
ஸூஸி மெரெயுவ விஷ்ணுப4க்தாக்3ரேஸரரு நெரெது3
தே3ஶதே3ஶதி3 பூ4ஷிஸலு ஹரி
தா3ஸகூட1த3 நாம பொந்தி3து
வ்யாஸகூட1த3 பெஸரு ப3யலது3 ப்3ராந்தியுத ப3ரிதெ3 ||42
வ்யாஸரொப்பரே - ஸ்ரீவேதவ்யாஸர் ஒருவரே; ஜககெ - உலகிற்கு; ஜீவர ராஷி எல்லரு - ஜீவராசி அனைவரும்; தாஸரெனிபரு - அவருடைய தாஸர் எனப்படுகின்றனர்; ஸூஸி மெரெயுவ - அனைத்து இடங்களிலும் சுற்றித் திரியும்; விஷ்ணுபக்தாக்ரேஸரரு - விஷ்ணு பக்தியை ஒப்புக் கொண்டவர்கள்; நெரெது - சென்று; தேஷதேஷதி பூஷிஸலு - (ஹரிதாஸ ஸாகித்யத்தை) அனைத்து இடங்களிலும் இவ்வாறு பரப்ப; ஹரிதாஸகூடத நாம - ஹரிதாஸ கூட என்னும் இந்த பெயர்; பொந்திது - பரவியது; வ்யாஸகூடத பெஸரு - வ்யாஸகூடத்தின் பெயர்; பயலது ப்ராந்தியுத பரிதெ - (வ்யாஸகூடத்தின் மூலமே மோட்சம்) என்னும் மயக்கம் வெகுவாக (மக்களிடையே) குறைந்தது.
இந்த பத்யத்தின் முதல் பகுதியை இரு விதமாக பொருள் கொள்ளலாம்.
அ. ஸ்ரீவேதவ்யாஸர் ஒருவரே (வேத விபாகங்களை செய்து, புராணங்களை உலகிற்குக் கொடுத்தவர்) ஸர்வோத்தமர். மற்றவர்கள் அனைவரும் (ஸ்ரீலட்சுமிதேவி முதற்கொண்டு உலகில் உள்ள அனைவருமே) அவருடைய தாஸர் எனப்படுகிறார்கள். விஷ்ணுபக்தாக்ரேஸரர் - வாயுதேவரின் மதத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவரும், அனைத்து இடங்களிலும் சென்று, ஹரிதாஸ ஸாகித்யத்தை பரப்ப, அது ‘ஹரிதாஸ கூட’ என்று பெயர் பெற்றது.
அ. ஸ்ரீமன் மத்வ மதே ஹரி: பரதர: என்று ஒன்பது பிரமேயங்களுடனான மத்வ ஸித்தாந்தத்தை விளக்கிய வ்யாஸர் (ஸ்ரீவ்யாஸ தீர்த்தர்), ஹரிதாஸ கூடத்தை துவக்கினார். பின்னால் வந்த அனைத்து ஹரிதாஸர்களும் (ஸ்ரீபுரந்தரதாஸர், ஸ்ரீவிஜயதாஸரிலிருந்து ஸ்ரீகுருகோவிந்த விட்டலதாஸர் மற்றும் இன்று இருக்கும் ஹரிதாஸர்கள் வரைக்கும்) அவருடைய தாஸர்களே. ஹரிஸர்வோத்தமத்வத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், அனைத்து இடங்களிலும் சென்று, ஹரிதாஸ ஸாகித்யத்தை பரப்ப, அது ‘ஹரிதாஸ கூட’ என்று பெயர் பெற்றது.
இதன் மூலம், வ்யாஸகூடத்தின் மூலமே மோட்சம் என்பதான சிந்தனை, மக்களிடையே அதிகமாக குறையத் துவங்கியது.
ஹரிதாஸ ஸாகித்யமானது மோட்சத்திற்கான பாதை என்பதை குறிப்பிட, பல்வேறு உதாரணங்கள் இருந்தாலும், ஸ்ரீவாதிராஜர் தனது தத்வஸார கிரந்தத்தின் பல்லவியில் இதையே தெளிவாக கூறுவதை பார்க்கலாம்.
இது3 புண்யகதெ2 லோகக்கிது3 முகுதிய பத2
இத3 கேளுவவனெ க்ருதார்த்த2 || பல்லவி
இந்த கிரந்தத்தின் விஷயம், நித்யஸுக ஸாதனத்தின் நிரூபணம் ஆகும். அஞ்ஞான நிலையில் இருக்கும் ஸஜ்ஜனர்களுக்கு இது மோட்சத்தைக் காட்டும் மார்க்கம் ஆகும். இதனை கேட்டு, நிஷ்டையை பெறுபவனே, தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொண்டவன்.
***
No comments:
Post a Comment