Sunday, June 5, 2022

[பத்யம் #28] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #28] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #28]

கு3ருவினாக்3ஞெயெ மூலமந்த்ரவு

கு3ருவே த்4யானகெ மூலமூர்த்தியு

வர ஸுபூஜெகெ3 மூலவெனிபவு கு3ருவினங்க்4ரிக3ளு |

கு3ருகடாக்ஷவெ மோக்ஷமூலவு

கு3ருவெ ஸர்வகு1 மூல காரண

ஹர ஸுராத்3யரிக3வஷ கு3ருவின மஹிமெ 3ண்ணிபுது3 ||28 

குருவினாக்ஞெயெ மூலமந்த்ரவு - குருவின் ஆணையே மூல மந்திரம்; குருவே த்யானகெ மூலமூர்த்தியு - தியானத்திற்கு குருவே மூலமூர்த்தி ஆவார்; வர ஸுபூஜெகெ - சிறந்த பூஜைக்கு; மூலவெனிபவு - தக்கது எனப்படுபவை; குருவினங்க்ரிகளு - குருவின் பாதங்களே ஆகும்; குருகடாக்ஷவெ - குருவின் அருளே; மோக்ஷமூலவு - மோட்சத்திற்கான வழியாகும்; குருவெ ஸர்வகு மூல காரண - குருவே அனைத்திற்கும் மூல காரணம் ஆவார்; ஹர ஸுராத்யர்கெ - ஹரன் முதலான அனைத்து தேவதைகளுக்கும்கூட; குருவின மஹிமெ - குருவின் மகிமைகளை; பண்ணிபுது - வர்ணிப்பது என்பது; அவஷ - முடியாத செயலாக இருக்கிறது. 

குரு ஸேவையையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர். 

குருவின் ஆணையே சிஷ்யருக்கு மூலமந்திரம். தியானத்திற்கு குருவே மூலமூர்த்தி ஆவார். குருவின் பாதங்களே சிறந்த பூஜைக்கு ஏற்றதாகும். குருவின் அருளே மோட்சத்திற்கான வழியாகும். குருவே அனைத்திற்கும் மூல காரணம் ஆவார். ருத்ரரே முதலான அனைத்து தேவதைகளுக்கும்கூட, குருவின் மகிமைமளை வர்ணிப்பது என்பது முடியாத செயலாக இருக்கிறது. 

குருவைப் பற்றியும், அவருடைய சிறப்புகளைப் பற்றியும் ஹரிதாஸர்களின் பல கிருதிகளை முந்தைய பத்யங்களில் பார்த்திருக்கிறோம்.

***


No comments:

Post a Comment