[பத்யம் #41] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #41]
வ்யாஸகூட1வெ தா3ஸகூட1வு
வ்யாஸஸத்வவெ தா3ஸஸத்வவு
வ்யாஸவிரசித க்3ரந்தஸாரத3
திளலு தா3ஸத்வ
ஆ ஸமீரரெ போ3தி4ஸிரலித3
தா3ஸ முக்2யரு
எனிஸி ஜக3தொ3ளு
லேஶவாத3ரு எணிஸலாக3து3 பே4த3வித3ரொளகெ3 ||41
வ்யாஸகூடவெ தாஸகூடவு - தாஸகூடம் என்பது வ்யாஸகூடமே ஆகும்; வ்யாஸதத்வவே தாஸதத்வவு - தாஸ தத்வம் என்பது வ்யாஸ தத்வமே ஆகும்; வ்யாஸவிரசித - ஸ்ரீவேதவ்யாஸர் இயற்றிய; க்ரந்தஸாரத - கிரந்தங்களின் ஸாரத்தின்; திளலு - விஷயமே; தாஸத்வ - தாஸத்வம் ஆகும்; ஆ ஸமீரரே - அந்த ஸ்ரீமன் மத்வாசார்யரே; போதிஸிரலு - இதனை போதித்திருக்க; இத தாஸ - இந்த தாஸகூடத்தவர்களும் ; முக்யரு எனிஸி - முக்கியமானவர்களே என்று அறிந்து; ஜகதொளு - உலகில்; இதரொளகெ - இந்த இரண்டிலும்; லேஷவாதரு - சிறிதேனும்; பேதவு எணிஸலாகது - வேறுபாட்டினை காணக்கூடாது.
ஹரிதாஸ ஸாகித்யம் என்றால் என்ன என்று விளக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீதாஸர். ஹரிதாஸகூடம் என்பது தானாக ஏதோவொரு விஷயத்தை விளக்குவது இல்லை. வ்யாஸகூடத்தில் இருப்பதையே எளிமையான கன்னடத்தில் விளக்குகிறது. அரிதான / புரியாத விஷயங்களை சுலபமாக புரிய வைப்பதற்காக, தக்க உபமான உவமேயங்களுடன் விளக்குவதே ஹரிதாஸ ஸாகித்யம் என்கிறார்.
வ்யாஸகூடமே தாஸகூடம் ஆகும். தாஸ தத்வம் என்பது வ்யாஸ தத்வமே ஆகும். ஸ்ரீவேதவ்யாஸர் இயற்றிய கிரந்தங்களின் ஸாரத்தின் விஷயமே தாஸத்வம் ஆகும். அந்த ஸ்ரீமன் மத்வாசார்யரே இதனை போதித்திருக்க, இந்த தாஸகூடத்தவர்களும் முக்கியமானவர்களே என்று அறிந்து, இந்த இரண்டிலும் (வ்யாஸகூட, தாஸகூட) சிறிதும் வேறுபாட்டினை காணக்கூடாது என்கிறார்.
ஹரிதாஸ ஸாகித்யத்தில் உள்ள அனைத்து விஷயங்களுக்கும் தக்க வ்யாஸ ஸாகித்யத்தின் உதாரணத்தைக் கொடுக்கலாம்.
நாமஸ்மரண ஸுளாதியில், ஸ்ரீவிஜயதாஸர் :
கு3ண கால தே3ஷ கர்ம க்ரியெ நாம தீர்த்த2 தே3ஹ
ஜனன மிக்காத3 நால்கு பகெ3 வ்யாபார
ஜனன நானா ஜந்து வர்ஷ க2ண்ட3 த்வீபா3தி4 க3க3ன..
என்று நித்ய ஸ்மரண விதியை விளக்குகிறார். கர்ம ஸித்தாந்தத்தை சுருக்கமாக சொல்லும் விதமாக இது இருக்கிறது. ‘யஸ்மின் ஸர்வாணி கர்மாணி ஸன்யஸ்யாத்யாத்ம சேதஸா’ என்று சதாசார ஸ்ம்ருதியில் ஸ்ரீமதாசார்யர் கூறிய - தகாத விருப்பங்களை துறந்து, அனைத்து வித கர்மங்களையும் ஸ்ரீஹரியின் பூஜா ரூபமாக செய்து, அவற்றை அவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும். பாப & புண்ய கர்மங்கள் இரண்டையும் ஸ்ரீஹரியே செய்விக்கிறான். ஆகையால், சர்வகர்மங்களையும் அவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும்.
இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம்.
தாவத்கர்த்தும் ந ஷக்னோதி பாதகம் பாதகீ பாதகீ ஜன: |
ஸ்மர்தவ்ய: ஸததம் விஷ்ணு: விஸ்மர்தவ்யோ ந ஜாதுசித் ||
அனைத்து விதி, விதிவிலக்குகளின் பொருள் - ஹரியை நினையுங்கள். ஹரியை மறக்காதீர்கள் என்றே இருக்கிறது. பகவந்தனின் கதா சிரவண, ஸ்மரணை, கீர்த்தனாதிகளால் லௌகிக காரியங்களை செய்தாலும், பகவந்தனில் சித்தத்தை வைத்த மனிதனுக்கு சம்சார பந்தகம் ஆவதில்லை.
க்ரியாஸு யஸ்த்வச்சரணாவிந்தயோ: ஆவிஷ்டசித்தோ |
ந பவாய கல்பதே || பாக 10-2-37
மக்களாடிசுவாக மடதியொ
ளக்கரதி நலிவாக ஹய ப
ல்லக்கி கஜமொதலாத வாஹனவேரி மெரெவாக |
பிக்குவாக ஆகளிசுதலி தே
வக்கிதனயன நெனெவுதிஹ நர
சிக்கனெம தூதரிகெ ஆவாவல்லி நோடிதரு ||
(ஹரிகதாம்ருதசாரம் 13-1)
நதி ஹரியுத்ததெ (நதி பாய்கிறது), வஸ்த்ரவன்னு ஹரி (துணியைத் துவை) என்று லௌகிக விஷயங்களை ஹரி என்று சிந்தித்தாலே பாவங்கள் போகின்றன என்றபோது, பக்தியுடன் கூறினால் பாவங்கள் பரிகாரம் ஆவதில்லையா? பஞ்சுப்பொதியலில் நெருப்பு வைத்தால், அது நொடியில் எரிந்து பஸ்மம் ஆவதைப் போல, ஹரி ஸ்மரணையினால் பாவங்கள் என்னும் பஞ்சுக்குவியல் சுட்டுப் போகின்றன.
ஹரி ஹரீ ஹரியெம்ப எரட
க்ஷர நுடித மாத்ரதலி துரிதக
ளிரதெ போபவு தூலராஷியொளனலு பொக்கந்தெ ||
ஹரிஸ்மரணைக்கு நேரம், காலம், ஜாதி ஆகிய எவையும் தடையில்லை. ஷௌச காலத்திலும் ஹரிஸ்மரணை செய்யவே வேண்டும். ஸ்ரீஹரியை மகிழ்விக்க வித்யை, கால, ரூப, தன, சாஸ்திர ஞான, இவை எதுவும் பக்தி இல்லையெனில் வீண் ஆகின்றன. இவை எதுவும் இல்லாமல் பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்தால், ஹரி மகிழ்கிறான் -- அக்னி புராணம்.
***
No comments:
Post a Comment