[பத்யம் #51] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #51]
மிதிரஹித அம்ஶக3ள த4ரிஸிஹ
பதிதபாவன ஸ்வாமி யோக்3யர
கதிகெ3 காரணவாகி3 தோருவனொந்து3 அம்ஶத3லி
ஸதிகெ3 பதி இப்பந்தெ ஜீவகெ3
ஹிதவனிணிஸுவ பி3ம்ப3 நாமக
பதிகரிஸி தா த4ரிப நாமவெ மனுஜக3ங்கிதவு ||51
மிதிரஹித - எல்லைகள் அற்ற; அம்ஷகள - அம்சங்களை; தரிஸிஹ - கொண்ட; பதிதபாவன - பக்தர்களைக் காப்பவனான; ஸ்வாமி - ஸ்ரீஹரி; யோக்யர கதிகெ - தக்க ஸாதனைகளை செய்தவர்களின் முக்திக்கு; காரணவாகி - காரணன் ஆகி; ஒந்து அம்ஷதலி - ஒரு அம்சத்தில்; தோருவ - காட்டிக் கொள்கிறான்; ஸதிகெ பதி இப்பந்தெ - மனைவிக்கு கணவன் உதவிகரமாக இருப்பதைப் போல; ஜீவகெ - அந்த ஜீவனுக்கு; ஹிதவனு - நன்மையையே; எணிஸுவ - நினைக்கிறான்; பிம்ப நாமக - அந்த பிம்பரூபி; பதிகரிஸி - அருளி; தா தரிப - தான் ஏற்றுக் கொள்ளும்; நாமவெ - பெயரே; மனுஜகங்கிதவு - மனிதனுக்கு, அங்கித நாமம் ஆகிறது.
எல்லைகள் அற்ற அம்சங்களைக் கொண்டவனான, பக்தர்களை காப்பவனான, ஸ்ரீஹரி, தக்க ஸாதனைகளை செய்தவர்களின் முக்திக்கு காரணன் ஆகி, ஒரு அம்சத்தில் தன்னை காட்டிக் கொள்கிறான். மனைவிக்கு கணவன் உதவிகரமாக இருப்பதைப் போல, அந்த ஜீவனுக்கு எப்போதும் நன்மையையே நினைக்கிறான். அந்த பிம்பரூபி அருளி, தான் ஏற்றுக் கொள்ளும் பெயரே மனிதனுக்கு அங்கித நாமம் ஆகிறது.
அங்கித நாமம் என்றால் என்ன என்று விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். பிம்பரூபியின் பெயரே அந்த அங்கித நாமம் என்றும், அந்த பிம்பரூபி பகவந்தன், அந்த பக்தனுக்கு எப்போதும் நலனையே நினைக்கிறான் என்கிறார்.
ஹ்ருத3ய தொ3ளகி3ஹுதஷ்டத3ள கம
லத3ரொளகெ3 ப்ராதே3ஷ நாமக
நுதி3த பா4ஸ்கரனந்தெ தோர்பனு பி3ம்ப3னெந்தெ3னிஸி |
பது3ம சக்ர ஸுஷங்க2 ஸுக2தா3
ங்தகடக முகுடாங்கு3லீயக
பத3க கௌஸ்துப3ஹார க்3ரைவெயாதி3 பூ4ஷிதனு ||(8-6)
நம் இதயத்தில் இருக்கும் அஷ்ட தள கமலத்தில், ப்ராதேஷ நாமகனான பிம்பன், உதய சூரியனைப் போல ஒளிர்கிறான். அவன் அனைத்து வித ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளான்.
அந்தரங்கத கதவு தெரெயிதிந்து
எந்து புண்யத பலவு ப்ராப்தி தொரகிது எனகெ
ஸ்வமூர்த்தி கண மத்ய சச்சிதானந்தெய்க
ரமெதரெயரிந்த லாலிங்கத்வதி |
கமலஜாஜிகளிந்த துதிஸிகொள்ளுத ஹ்ருதய
கமலதொளகிருவ ஸ்ரீவிஜயவிட்டலன கண்டே
ஸ்ரீவிஜயதாஸருக்கு பிம்பரூப தரிசனம் ஆன அனுபவத்தை விளக்கும் பாடல். தனது இதய கமலத்தில் பிம்பனாக இருக்கும் ஸ்ரீவிஜயவிட்டலனை கண்டேன் என்கிறார் ஸ்ரீவிஜயதாஸர்.
***
No comments:
Post a Comment