[பத்யம் #60] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #60]
இருதிஹது3 அல்பாயு அத3ரொளு
இரளு ஷைஷவ வார்த்தி2கவு வி
ஸ்மரணெ ப்ராயத3 மத3தி3 போகு3து1ளிவ கெலதி3னதி3 |
ப3ரிதெ3 த1னு த4ன மமதெ தாளதெ3
பர விசாரதொ3ளெரகி3ஸுத மன
கு3ருகருண ஹரிக்ருபெய பொந்து3வ யத்னெகெ3ய்யுவுது3 ||60
இருதிஹது - இருப்பதே; அல்பாயு - அல்ப ஆயுள்; அதரொளு - அதில்; இரளு - இரவு; ஷைஷவ - மழலை; வார்த்திகவு - முதுமை; விஸ்மரணெ - மயக்கம்; ப்ராயத மததி - வாலிப கர்வத்தில்; போகுது - போய்விடுகிறது; உளிவ கெலதினதி - (இவ்வளவுக்குப் பிறகு) இருக்கும் சில நாட்களில்; பரிதெ - அதிகப்படியான; தனு தன மமதெ - தேகம், செல்வத்தின் கர்வம்; தாளதெ - கொள்ளாமல்; பர விசாரதொளு - பகவந்தனின் விஷயத்தில்; மன எரகிஸுத - மனதை நிறுத்தியவாறு; குருகருண - குருவின் கருணையை; ஹரிக்ருபெய - ஸ்ரீஹரியின் அருளை; பொந்துவ - அடையும்; யத்னெகெய்யுவுது - முயற்சியை செய்ய வேண்டும்.
நமக்குக் கிடைத்திருக்கும் இந்த அரிய பிறவியில், கிடைத்த நேரத்தில், ஆத்யாத்மிக ஸாதனையை செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
இருப்பதே அல்ப ஆயுள். அதில் இரவு, மழலை, முதுமை, மயக்கம், வாலிப கர்வம் ஆகிய அனைத்து நிலைகளில் காலம் போய்விடுகிறது. இவ்வளவுக்குப் பிறகு, இருக்கும் சில நாட்களில், தன் தேகம், செல்வத்தைப் பற்றிய அதிகப்படியான கர்வத்தை கொள்ளாமல், பகவந்தனின் விஷயத்தில் மனதை நிறுத்தியவாறு, குருவின் கருணையை, ஸ்ரீஹரியின் அருளை அடையும் முயற்சியை செய்ய வேண்டும்.
வருஷ நூராயுஷ்யவதரொளு இருளு களெதெய்வத்து ஐவ
த்தரல்லி வார்த்திக பால்ய கௌமார்யதலி மூவத்து
இரதெ ஸந்தது பளிக இப்பத்வருஷ வதரொள காதுதந்த:
கரண நின்னொளு தோரி ரக்ஷிஸு நம்மனனவரத ||80
ஹரிபக்திஸார’வில் ஸ்ரீகனகதாஸர் கூறியிருப்பதையே இங்கு ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர், விளக்கியிருக்கிறார். ஆயுள் 100 ஆண்டுகள் எனக் கொண்டால்; அதில் இரவு 50 ஆண்டுகள்; மழலை, பால்யம், முதுமை என 30 ஆண்டுகள் போய்விட்டால்; மிச்சம் இருப்பது 20 ஆண்டுகளே. அந்த ஆண்டுகளில் நான் உன்னையே நினைக்குமாறு எனக்கு அருள்புரிவாயாக என்கிறார் ஸ்ரீகனகதாஸர்.
***
No comments:
Post a Comment