Saturday, July 2, 2022

[பத்யம் #52] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #52] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #52]

திளியுவரு பி3ரம்மாபரோக்ஷிக3

ளொலிது3 உபதே3ஶிபரு ஸத்வர

நெலெ திளிது3 ஸத்34யவமாடு3 கு1ருஹு தோருத1லி |

நிலிஸெ ஸ்ரீஹரி அங்கிதவ நி

ஶ்சலதி3 ஞானத3 2லவ காம்ப3ரு

ஸுலப4தொ3ளகி3து3 லப்4யவாக3து3 அக4வு தொலக33லெ ||52

பிரம்மாபரோக்ஷிகளு - தன்னுடைய ஸாதனைகளை முழுவதுமாக செய்தவர்கள்; திளியுவரு - (இத்தகைய ஸாதனா ஜீவிகளைப் பற்றி) அறிவார்கள்; குருஹு தோதலி - விஷ்ணு பக்தர்களின் சின்னங்களை (முத்ரா, கோபிசந்தனங்களை) தரித்தவாறு; ஒலிது - வந்து; ஸத்வர நெலெ திளிது - இந்த ஜீவரின் நிலையை அறிந்து; ஸத்தயவமாடுத - மிகப்பெரிய கருணையைக் காட்டியவாறு; உபதேஷிபரு - உபதேசம் செய்வார்கள்; ஸ்ரீஹரி அங்கிதவ - ஸ்ரீஹரியின் அங்கிதத்தை; நிஷ்சலதி - திடமாக தீர்மானித்து; நிலிஸெ - கொடுக்க; ஞானத பலவ காம்பரு - (அவருடைய) ஞானத்தின் பலனை காண்பார்; ஸுலபதொளகிது - இது மிகவும் சுலபமாக; அகவு - பாவங்கள் ; தொலகதலெ - பரிகாரம் ஆகாமல்; லப்யவாகது- கிடைக்கக்கூடியது அல்ல.

 அங்கிதம் கிடைக்கும் விதத்தைப் பற்றி இங்கு விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர்.

தன்னுடைய ஸாதனைகளை முழுவதுமாக செய்தவர்கள் (குரு), (அங்கிதம் பெறக்கூடிய) ஸாதனா ஜீவிகளை கண்டறிவார்கள். எப்படியென்றால், அந்த ஜீவிகள், விஷ்ணு பக்தர்களின் சின்னங்களை தரித்தவாறு, ஸாதனைகளை செய்ய விரும்பிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு, ஸ்ரீஹரியின் அங்கிதத்தை, திடமாக தீர்மானித்து கொடுக்க, அவர் (சிஷ்யர்) ஞானத்தின் பலனைக் காண்பார். இந்த அங்கிதமானது, மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடியது அல்ல.

ஒரு குருவின் லட்சணங்களை இங்கு சொல்கிறார். தக்க சிஷ்யரைக் (அங்கிதம் பெறுவதற்கான தகுதியுள்ள) கண்டுபிடிக்கக்கூடிய லட்சணங்களை அவர் கொண்டிருப்பார்.

 இரபேகு ஹரிதாஸர ஸங்க

வரஞானிகள தய ஸம்பாதிஸபேகு ||

 ஸத்கர்ம மாடபேகு வைஷ்ணவனெனிஸ பேகு

உத்க்ருஷ்ட வைராக்ய பேகு துஷ்ட ஸங்க பிட பேகு

விஷ்ணு தாஸர தாஸனாக பேகு

எஷ்டு கஷ்ட பந்தரு விஷ்ணு பஜிபர ஸங்க ||4

அந்த குருவிற்கு இருக்க வேண்டிய லட்சணங்களின் பட்டியல் இது. 1. ஸத்கர்மங்களை செய்ய வேண்டும் 2. வைஷ்ணவ தீக்ஷை இருக்க வேண்டும் 3. சிறந்த வைராக்கியம் கொண்டிருக்க வேண்டும் 4. துஷ்டர்களின் ஸங்கத்தை விடவேண்டும் 5. விஷ்ணு தாஸர்களின் தாஸன் ஆகவேண்டும் 6. இடைவிடாமல் விஷ்ணு பக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.

அங்கிதம் பெறக்கூடிய தக்க சிஷ்யரை குரு கண்டடைவதும் ஒரு சுலபமான வழிமுறை அல்ல என்று ஸ்ரீதாஸர் சொல்கிறார். இதனை ஸ்ரீபரமப்ரிய சுப்பராய தாஸர், ஸ்ரீகுருகோவிந்த தாஸர் ஆகியோர் அங்கிதம் வழங்கும் முறைகளை அவரவர்களின் வாழ்க்கை சரிதத்தைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

குரு மற்றும் சிஷ்யர் இருவரும் பகவந்தனை வேண்டிக்கொண்டு, சங்கல்பம் செய்து, சேவை செய்ய வேண்டும். அந்த சேவா காலத்தில் இருவரில் யாராவது ஒருவருக்கு பகவந்தனின் ப்ரேரணை வர வேண்டும். அப்படி வந்தால், அங்கிதம் வழங்கப்படும். இல்லையெனில், சேவா காலம் தொடரும். இப்படியாக, பகவந்தனின் ப்ரேரணையைப் பெற்றே ஹரிதாஸர்கள் அங்கிதம் வழங்கி வந்தனர் என்பதை அறியலாம். அந்தந்த சிஷ்யர்களின் தகுதிப்படி, விரைவிலோ / தாமதமாகவோ அங்கிதம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அறிகிறோம்

***


No comments:

Post a Comment