[பத்யம் #59] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #59]
முன்னெ விஸ்தரிஸிருவ பரியலி
புண்யதொ3ள்ஸம்ப்ராப்த க4ன ஸம்
பன்னத1னு பொந்தி3ரலு தன்னய கார்யவனு நெனெது3 |
இன்னிதர விஷரூப விஷயவ
மண்ணினந்த3தி3 திளிது3 காலவ
சின்னதோ3பாதி3யலி கு3ணிஸுத தத்வபரனாகு3 ||59
முன்னெ விஸ்தரிஸிருவ பரியலி - முன்னரே நாம் பார்த்ததைப் போல; புண்யதொள் - புண்ணியத்தினால்; ஸம்ப்ராப்த - கிடைத்த; கன ஸம்பன்னதனு - சிறந்த விலைமதிப்பற்ற தேகம்; பொந்திரலு - வந்திருக்க; தன்னய கார்யவனு நெனெது - செய்ய வேண்டிய செயல்களை நினைத்து; இன்னிதர - மற்ற; விஷரூப விஷயவ - விஷத்திற்கு சமானமான விஷயங்களை; மண்ணினந்ததி - மண் போல துச்சமாகவும்; காலவ - காலத்தை; சின்னதோபாதியலி - தங்கத்தைப் போலவும்; திளிது - அறிந்து; குணிஸுத - குதித்தாடியவாறு; தத்வபரனாகு - தத்வத்தை தேடியவாறு இரு.
காலத்தின் மதிப்பினையும், செய்ய வேண்டிய செயல்களின் முக்கியத்துவத்தையும் இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
மேலே பார்த்தவாறு, பிறவிப்பயன்களால் (புண்ணியங்களால்) இந்த சிறந்த விலைமதிப்பற்ற தேகம் வந்திருக்க, செய்ய வேண்டிய செயல்களை நினைத்து; மற்ற (கெட்ட) செயல்களை விஷத்திற்கு சமானமாக, மண் போல துச்சமாக நினைத்து; காலத்தை தங்கத்தைப் போலவும் அறிந்து; மகிழ்ச்சியில் குதித்தாடியவாறு, தத்வத்தை தேடியவாறு இரு.
இந்த தேகம் கிடைத்தது அரிதானது, மிகச் சிறப்பானது, இதனை வீணடிக்கக்கூடாது என்பதற்கான உதாரணங்களாக ஹரிதாஸர்களின் பல கிருதிகளை முன்னரே மேலே பார்த்திருக்கிறோம் என்பதால் மறுபடி இங்கே கொடுக்கவிலை.
***
No comments:
Post a Comment