Monday, July 25, 2022

[பத்யம் #74] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #74] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #74]

கர்மவாசரிஸுவுது3 ஜீவன

4ர்ம க்ஷணலவகாலவாத3ரு

கர்ம வாங்மன தே3ஹதி3ந்த33கி3புது3 து3ஸ்ஸாத்4 |

மர்மவித3ரொளக3ரிது 3ஹு வித4

கர்மதொ3ளகா3ஸக்தவாக3தெ3

கர்ம மாள்புது3 கர்த்ருவெனிஸதெ3 கர்மப2 பி3ட்டு ||74 

கர்மவாசரிஸுவுது - கர்மங்களை செய்ய வேண்டியது; ஜீவன தர்ம - ஜீவனின் தர்மம் ஆகும்; க்ஷண லவகாலவாதரு - ஒரு சில நொடிகளே ஆனாலும்; வாங்மன தேஹதிந்த - மனோ, வாக்,காயத்தினால்; கர்ம அடகிபுது - கர்மங்களை செய்யாமல் இருப்பது; துஸ்ஸாத்ய - ஸாத்தியம் இல்லாத செயல் ஆகும்; மர்மவிதரொளகரிது - (ஆனால்), இதில் உள்ள மர்மங்களை / ரகசியங்களை அறிந்து; பஹு வித - பற்பல; கர்மதொளகெ - கர்மங்களில்; ஆஸக்தவாகதெ - ஈடுபடுத்திக் கொள்ளாமல்; கர்த்ருவனிஸதெ - தானே செய்கிறேன், தானே கர்த்ரு என்று எண்ணாமல்; கர்மபல பிட்டு - (மற்றும்) கர்ம பலன்களை விட்டு; கர்ம மாள்புது - கர்மங்களை செய்ய வேண்டும். 

கர்மங்களை செய்ய வேண்டியது, பிறந்திருக்கும் அனைத்து ஜீவர்களின் தர்மம் ஆகும். ஒரு சில நொடிகளே ஆனாலும், மனோ வாக் காயங்களினால் கர்மங்களை செய்யாமல் இருப்பது, ஸாத்தியம் இல்லாத செயல் ஆகும். ஆனால், இதில் உள்ள ரகசியங்களை அறிந்து, பற்பல கர்மங்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல், தானே செய்கிறேன், தானே கர்த்ரு என்று எண்ணாமல், மற்றும் கர்ம பலன்களை விட்டு, கர்மங்களை செய்ய வேண்டும். 

கர்த்ருத்வ அபிமானத்தை விட்டு, அனைத்தும் ஸ்ரீஹரியினாலேயே நடக்கிறது, நடத்துபவன் அவனே, அவன் நடத்துவதையே நான் செய்கிறேன், செய்த அனைத்தையும் அவனுக்கே அர்ப்பிக்கிறேன் என்று நினைக்க வேண்டும் என்னும் இந்த கருத்தினை ஸ்ரீஜகன்னாததாஸர் ஹரிகதாம்ருதஸாரத்தில் பல பத்யங்களில் விளக்கியுள்ளார். அதில் ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம். 

நதி3 ஜல நதி3கெ3ரெவ தெரத3

ந்த33லி 4கவத்3தத்த 4ர்மக3

ளுத3தி4 ஷயனனிக3ர்ப்பிஸுத வ்யாவ்ருத்த நீனாகி3 |

விதி4 நிஷேதா4தி33ளிகொளகா3

33லெ மாடு3 3ர்வியந்த3தி3

பது3மனாப4 சகலகர்மக3ளல்லி நெனெயுதிரு ||36 

ஆற்று நீரை ஆற்றிலேயே (அர்க்யத்தை) கொடுப்பதைப் போல பரமாத்மன் கொடுத்த தர்மங்களை பாற்கடலில் படுத்திருக்கும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பித்தவாறு நீ நானே செய்தேன் என்னும் சிந்தனையை விட்டு, அதாவது ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானத்தை விட்டு செய்ய வேண்டியதை, செய்யக்கூடாதவற்றை, நானே செய்தேன், நானே விட்டேன் என்ற புத்திக்கு (அஹங்காரத்தை) ஆளாகாமல்  -ஸ்வதந்த்ரனான நான், பரமாத்மன் செய்வதைப்போல செய்வேன் என்னும் சிந்தனையுடன் கர்மங்களை செய்ய வேண்டும். 

இதே கருத்தினை ஸ்ரீபுரந்தரதாஸர் தனது ஒரு கிருதியில் இவ்வாறு கூறியிருக்கிறார். 

கர்மவே தாரகவு ஜீவரிகெல்ல

கர்மவே தாரகவு || 

கர்ம தாரக காணோ நிஸ்சய மாது

துர்மதியனு பிட்டு மர்மவனரியதே ||அப 

ஜீவர்களுக்கு, முக்திக்கான வழி கர்மங்களை செய்வதே. ஆனால், இதன் மர்மங்களை அறிந்து இதனை செய்ய வேண்டும் என்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர்.

****


No comments:

Post a Comment