Friday, July 22, 2022

[பத்யம் #71] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #71] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #71]

ஹலவு கர்மகெ காரணெனிஸுவ

3லித தனுமன 4னத3 ஷுத்3தி4

நெலெயரிது கர்மக3 ஆத்3யந்தவனு மனக3ண்டு3 |

நளினனாப4 வலிஸித3வரீ

இளெயொளகெ3 இன்னுண்டெ1 3லுஹிலி

திளியுவரு ஜட3 கர்ம தா1ரகவென்னுத க்3 ஜன ||71 

ஹலவு கர்மகெ - பல்வேறு கர்மங்களை செய்ததற்கு; காரணெனிஸுவ - காரணம் எனப்படும்; பலித - இவ்வாறு நமக்குக் கிடைத்த; தனு மன தனத - தேகம், மனம், செல்வத்தின்; ஷுத்திய நெலெயரிது - சுத்தமானதா என்பதை சரியாகப் புரிந்துகொண்டு; கர்மகள ஆத்யந்தவனு - செய்த கர்மங்களின் ஆதி, அந்தங்களை; மனகண்டு - புரிந்துகொண்டு; நளினனாபன - ஸ்ரீஹரியை; வலிஸிதவரு - மகிழ்வித்தவர்கள்; இளெயொளகெ - இந்த பூமியில்; இன்னுண்டெ - இருக்கிறார்களா?; அக்ஞ ஜன - மந்த மதி கொண்டவர்கள்; தாரகவென்னுத - ஜடங்களாலேயே கர்மங்கள் நடக்கின்றன என்று; பலுஹிலி திளியுவரு - தங்கள் சாமர்த்தியத்தினால் (யோக்யதையினால்) அறிவார்கள்; 

இந்தப் பிறவியில் நமக்குக் கிடைத்துள்ள இந்த தேகமானது, (முன்பு) செய்த பல்வேறு கர்மங்களுக்கு காரணம் எனப்படுகிறது. அப்படி கிடைத்த இந்த தேகம், மனம், செல்வங்களின் நிலையை அறிந்துகொண்டு (தம் யோக்யதையை சரியாக புரிந்துகொண்டு), இப்போது ஸ்ரீஹரியை மகிழ்வித்தவர்களுக்கு, இந்த பூமியில் மறுபடி பிறவி இருக்கிறதா? (இல்லை). 

அத்தகையவர்கள், தங்களின் கர்மங்களின் ஆதி, அந்தங்களை சரியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்களால் செய்யப்படும் கர்மங்களை, அந்தந்த தத்வாபிமானி தேவதைகளின் உதவியுடனேயே நடக்கின்றன என்பதை அறிந்து, அனைத்து கர்மங்களையும் பாரதிரமண முக்யபிராணாந்தர்கத ஸ்ரீஹரிக்கே சமர்ப்பிக்கின்றனர். 

ஆனால், அஞ்ஞானி மக்கள், தங்கள் கர்மங்கள் அனைத்தும் ஜடங்களான தேகத்தினால், உறுப்பினால் நடக்கிறது என்று, அவரவர்களின் தகுதிக்கேற்ப தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  

கர்மங்களை செய்யும் இந்திரியங்களில் அடங்கியிருக்கும் தத்வாபிமானி தேவதைகளை சிந்திக்க வேண்டும் என்பது இந்த பத்யத்தின் கருத்தாக இருக்கிறது. 

கர்மவே தாரகவு ஜீவரிகெல்ல

கர்ம தாரக கேளோ நிர்ணய மாது -

துர்மதியனு பிட்டு மர்மவனரியதெ

(ஸ்ரீபுரந்தரதாஸர்) 

ஸ்ரீபுரந்தரதாஸர் இந்தப் பாடலில் 7 பத்யங்களில் சொல்லியிருக்கும் விஷயங்களையே, இந்த ஒரு பத்யத்தில் சுருக்கமாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.

****


No comments:

Post a Comment