Monday, July 4, 2022

[பத்யம் #54] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #54] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #54]

கு3ருக3ளிந்த3லி தொ3ரகித3ங்கித

பரிய 3ண்ணிஸலளவெ ஹ்ருத்க3

ஹரியு ஜீவகெ ஸர்வகாலதி3 பி3ம்ப3னெந்தெ3னிஸி |

ஸ்மரணெகொ33கு3 நாமவிது3 ஸலெ

ஹருஷ காரண ஜனுமஜனுமகெ1

கரெகரெய 4ரதி4 தா4டிஸி நிருத பொரெயுவுது3 ||54 

குருகளிந்தலி - குருகளிடமிருந்து; தொரகிதங்கித - கிடைத்த அங்கிதத்தின்; பரிய - சிறப்பினை; பண்ணிஸலளவெ - வர்ணிக்க முடியுமா? (முடியாது); ஹ்ருத்கத ஹரியு - இதயத்தில் இருப்பவனான ஸ்ரீஹரி; ஸர்வகாலதி - எல்லா காலங்களிலும்; ஜீவகெ - ஜீவனுக்கு; பிம்பனெந்தெனிஸி - பிம்பனாக இருந்து; ஸ்மரணெகொதகுவ - சிந்தனைக்கு வருவதான; நாமவிது - பெயர் இது; ஸலெ ஹருஷ காரண - நிரந்தரமான மகிழ்ச்சிக்குக் காரணமாகிறது; ஜனுமஜனுமகெ - அனைத்து பிறவிகளுக்கும்; கரெகரெய - திரும்பத்திரும்ப வரும்; பவஷரதி - சம்சார சுழற்சியை; தாடிஸி - தாண்டச் செய்து; நிருத பொரெயுவுது - நிரந்தரமாக காக்கிறது. 

பிம்ப அபரோக்ஷத்தை பெற்றுத் தருவதான அங்கிதத்தின் சிறப்புகளை இங்கு தொடர்ந்து விவரிக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

குருகளிடமிருந்து கிடைத்த அங்கிதத்தின் சிறப்புகளை நம்மால் வர்ணிக்க முடியுமா? (முடியாது). இதயத்தில் இருப்பவனான ஸ்ரீஹரி, அனைத்து காலங்களிலும் ஜீவனுக்கு பிம்பனாக இருந்து, அவனுடைய சிந்தனைக்கு வருவான். இதுவே அவனது நிரந்தரமான மகிழ்ச்சிக்கு காரணம் ஆகிரது. அனைத்து பிறவிகளுக்கும் திரும்பத்திரும்ப வருவதான, சம்சார சுழற்சியை தாண்டச் செய்து, அவனை நிரந்தரமாக காக்கிறது.

***



No comments:

Post a Comment