Monday, July 11, 2022

[பத்யம் #61] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #61] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #61]

ஸ்ரவண மனன த்4யானரூபத3

த்ரிவித3 ஸாத4 முக்2யவித3ரொளு

விவித4 விதி3 ஸுகர்ம ஸமுதா3யக3ளு அட3கி3ஹவு |

தவகதி3ந்த3னுப4வதி3 திளியுத

கவித3 மோஹவ களெது3 ஞானதி3

4வத3 3ந்த4 நீகி3 ஸாதி4ஸு பரமபத3வன்னு ||61 

ஸ்ரவண மனன த்யானரூபத - ஸ்ரவண, மனன, த்யான என்பதான; த்ரிவித ஸாதன - மூன்று விதமான சாதனைகள்; முக்யவு - முக்கியமானவை; இதரொளு - இவற்றில்; விவித - பல்வேறு; விதித - விதிப்படியான; ஸுகர்ம ஸமுதாயகளு - பல நல்ல கர்மங்கள் (செயல்கள்) அடங்கியிருக்கின்றன; தவகதிந்த - ஆர்வத்துடன்; அனுபவதி - அனுபவப்பட்டு; திளியுத - தெரிந்துகொண்டு; கவித - தன்னை சூழ்ந்த; மோஹவ - ஆசையை; களெது - துறந்து; ஞானதி - நல்லறிவுடன்; பவத பந்தன நீகி - பிறப்பு இறப்பு சுழற்சியினை நீக்கிக் கொண்டு; பரமபதவன்னு - பரமபதத்தை (முக்தியினை); ஸாதிஸு - அடைவாயாக. 

முக்திக்கான மார்க்கத்தை இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

ஸ்ரவண, மனன, த்யான என்னும் மூன்று விதமான ஸாதனைகள் முக்கியமானவை. இவற்றில் பல்வேறு விதிப்படியான பல நல்ல கர்மங்கள் (செயல்கள்) அடங்கியிருக்கின்றன. அத்தகைய செயல்களை ஆர்வத்துடன், செய்து, தெரிந்து கொண்டு, தன்னை சூழ்ந்த ஆசையை துறந்து, நல்லறிவினைப் பெற்று, பிறப்பு இறப்பு சுழற்சியை நீக்கிக்கொண்டு, பரமபதத்தினை (முக்தியை) அடைவாயாக. 

4னவ ஸம்பாதி3ஸுவ ப்ரத்3ரா

வணிகரந்த3தி3 கோவித3 மனெ

மனெக3ளலி ஸஞ்சரிஸு ஷாஸ்த்ர ஸரவண கோ3ஸுக3தி3 |

மனனகை3து3பதே3ஷிஸுத து3

ர்ஜனர கூடா33தி3ரு ஸ்வப்னதி3

ப்ரணதகாமத3 கொடு3 ஸௌக்2யவனிஹ பரங்க3ளலி ||28 

ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாததாஸர் ஸ்ரவண, மனன, தியானங்களின் முக்கியத்துவத்தை இவ்வாறாக சொல்லியிருக்கிறார். சஜ்ஜனர்களின் சங்கத்திற்காக வீடுவீடாகச் சென்று, அவர்கள் கூறுவதை ஸ்ரவணம் செய்து, பின் அதனை மனனம் செய்து, பிறருக்கும் உபதேசம் செய்தால், இஹபரங்களிலும் சுகம் கிடைக்கிறது என்று தாசராயர் கூறுகிறார். 

ஸ்ரீமன் மத்வாசார்யர் வாக்கு இது - ஸ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: - ஸ்ரவண, மனன, நிதித்யாஸன - ஸ்ரவண (கேட்டல்) இதுவே முதலில். பின்னர் இதிலிருந்து ஸ்மரணை (நினைத்தல்). இது ஸ்ரீஹரியைப் பற்றியே இருக்கவேண்டும்.

***


1 comment:

  1. ஸ்லேொகத்தின் விளக்கங்கள் எளிமையாகவும் மனதில் படியும்படியாக உள்ளது. நன்றி கலந்த நமஸ்கோரங்கள்
    ராஜா ராஜ் திருக்கேொவிலூர்

    ReplyDelete