[பத்யம் #62] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம்
#62]
ஸ்ரீனிவாஸனு ஹ்ருத3யமத்4யதி3
த்4யானதி3ந்த3லி பொளெவனல்லதெ3
காணிஸது3 அன்யோபாய த்4யானத3 ஹொரது மத்தொந்து3 |
த்4யானவெம்பு3து3 மனனஸாத்4யவு
த்4யானமனனவு ஶ்ரவணஸாத்4யவு
ஈ நிமித்ததி3 ஶ்ரவணமாள்புது3 ஞானிக3ள ஸாரி ||62
ஸ்ரீனிவாஸனு - ஸ்ரீஹரியானவன்; ஹ்ருதயமத்யதி - நம் இதய கமலத்தில்; தியானதிந்தலி - தியானத்தினால் மட்டுமே; பொளெவனு - காட்டிக் கொள்கிறான்; அல்லதெ - அல்லாமல்; த்யானத ஹொரது - தியானத்தைத் தவிர; மத்தொந்து - வேறொரு; அன்யோபாய - வேறு வழியில்; காணிஸது - தெரியாது (அவன் தெரிவதில்லை); த்யானவெம்புது - தியானம் என்பது; மனனஸாத்யவு - மனனத்தால் மட்டுமே ஸாத்தியம்; த்யான மனனவு - தியானம், மனனம் இரண்டுமே; ஸ்ரவணஸாத்யவு - சிரவணத்தால் மட்டுமே ஸாத்தியம்; ஈ நிமித்ததி - ஆகவே; ஞானிகள ஸாரி - ஞானிகளை அடைந்து; ஸ்ரவண மாள்புது - சிரவணம் செய்ய வேண்டும்.
பிம்ப தரிசனத்திற்கு தியானமே முக்கியம்; அந்த தியானத்திற்கு சிரவணம் தேவை என்பதை இந்த பத்யத்தில் வலியுறுத்துகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
ஸ்ரீஹரியானவன், நம் இதய கமலத்தில் தியானத்தினால் மட்டுமே காட்டிக் கொள்கிறான். தியானத்தைத் தவிர, வேறொரு வழியில் அவன் தெரிவதில்லை. தியானம் என்பது மனனத்தால் மட்டுமே ஸாத்தியம். தியானம், மனனம் இரண்டுமே சிரவணத்தால் மட்டுமே ஸாத்தியம். ஆகவே, ஞானிகளை அடைந்து, அவர்கள் சொல்வதை சிரவணம் செய்ய வேண்டும்.
ஸ்ரவணத்தின் சிறப்பினை இந்த மற்றும் அடுத்த இரு பத்யங்களில் விளக்குகிறார் ஸ்ரீதாஸர். இதனை ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தில் மிகவும் அழகாக சொல்லியிருப்பார்.
ஸ்ரவண மனனானந்த3வீவுது3
ப4வஜனித து3க்க2க3ள க1ளெவுது3
விவித4 போ4க3வ னிஹபரங்களலித்து ஸலஹுவுது3 |
பு4வனபாவன நெனிப லகுமி
த4வன மங்க3ள க1தெ2ய பரமோ
த்ஸவதி3 கி1விகொ3ட்டாலிபுது3 பூ4ஸுரரு தி3னதி3னதி3 ||1
பரமாத்மனின் கதைகளைக் கேட்கும்போது பேரானந்தம் ஆகிறது. நவகாதம்பரிகளை (நவீன நாவல்களை) படிக்கும்போதுகூட மகிழ்ச்சியே ஆகிறது. அதனால் என்ன என்று கேட்டால், அதில் கர்ணானந்தம் (கேட்கும் மகிழ்ச்சி) மட்டுமே ஆகும். இதில் சம்சாரத்திலிருந்து விடுதலையும் ஆகிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து துக்கங்களையும் பரிகரித்து பரலோகத்திலும் பற்பல விதமான போகங்களைக் கொடுத்து சுகத்தையும் கொடுக்கிறது. ஆகையால், இத்தகைய லோகபாவனனான, ஸ்ரீரமாபதியின் மங்கள கதையை மிகுந்த மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அனைவரும் கேட்கவேண்டும்.
***
No comments:
Post a Comment