[பத்யம் #73] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #73]
ஸ்ருஷ்டியிந்த3லி கட்டி கர்மவ
புட்டிஸுவ பரமேஷ்டி பித ப3ஹு
கஷ்டத1ர யோனிக3ள மத்4யதி3 இஷ்டு தா திளிது3 |
ப்4ரஷ்டனெனிஸலி ப3ஹுதெ3 ஸர்வோ
த்க்ருஷ்ட நரஜன்மதொ3ளக3ரியதெ3
ஸ்பஷ்டத3லி ப3ந்த4னவ நீகு3வ கர்ம மார்க3வனு ||73
ஸ்ருஷ்டியிந்தலி - படைத்ததிலிருந்தே; கர்மவ - கர்மங்களை; கட்டி - இணைத்து; புட்டிஸுவ - பிறக்க வைக்கும்; பரமேஷ்டி பித - ஸ்ரீஹரியானவன்; பஹு கஷ்டதர - மிகவும் கஷ்டப்படுவதான; யோனிகள மத்யதி - யோனிகளின் நடுவில்; இஷ்டு தா திளிது - மிகவும் கொஞ்சமாக அறிந்து (எதுவுமே அறியாமல்); ஸர்வோத்க்ருஷ்ட - மிகச் சிறந்ததான; நரஜன்மதொளகெ - இந்த மனிதப் பிறவியில்; பந்தனவ நீகுவ - சம்சார பந்தனத்தை விட்டு நீங்கும்; கர்ம மார்கவனு - வழிமுறைகளை / செய்ய வேண்டிய செயல்களை; ஸ்பஷ்டதலி - தெளிவாக; அரியதெ - தெரியாமல் (புரிந்து கொள்ளாமல்); ப்ரஷ்டனெனிஸலி பஹுதெ - நான் வீண் / இந்தப் பிறவி வீண் என்று சொல்லலாமா?
நம்மை படைத்ததிலிருந்தே, கர்மங்களை நம்முடன் இணைத்து பிறக்க வைக்கும் ஸ்ரீஹரியானவன், மிகவும் கஷ்டப்படுவதான, யோனிகளின் நடுவில், மிகச் சிறந்ததான இந்த மனிதப் பிறவியில், சம்சார பந்தனத்தை விட்டு நீங்கும் வழிமுறைகளை, செய்ய வேண்டிய செயல்களை தெளிவாக புரிந்து கொள்ளாமல் / அறியாமல், நான் வீண், இந்தப் பிறவி வீண் என்று சொல்லலாமா?
சம்சார பந்தனத்தை விட்டு நீங்கும் வழிமுறைகளை, இந்தப் பிறவி எடுத்ததற்கு செய்ய வேண்டிய விஷயங்களை, ஸ்ரீஜகன்னாததாஸர் தனது ‘பலவிது பாள்துதக்கெ’ என்னும் கிருதியில் 27 நுடிகளில் மிகவும் விளக்கமாக விளக்கியுள்ளார். அதிலிருந்து ஒரேயொரு பத்யத்தை அதன் அர்த்தத்துடன் பார்ப்போம்.
ப2லவிது3 பா3ள்து3த3க்கே
ஸிரி நிலயன குvணக3ள திளிது3 ப4ஜிஸுவதே |ப|
ஸ்ரீஹரியின் மகிமைகளை அறிந்து, அதனால் உண்டாகும் அன்பே, பக்தி. பக்தியினால் வேண்டுவதே, இந்த மனிதப்பிறவியை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆகையால், நம் தகுதிக்கேற்ப ஸ்ரீஹரியின் குணங்களை அறிவதற்கு முயலவேண்டும்.
க்3ருஹகர்மவ பே3ஸரத3லெ பரமோத்ஸஹத3லி மாடுத மூர்ஜக3த3
மஹிதன ஸேவேயிதெ3யெனுதலி மோத3தி3 அஹரஹர்மனதி3 சமர்ப்பிசுதிப்புதே3 |12|
கிருஹஸ்த தர்மங்களை உற்சாகத்துடன் செய்து அவற்றை ஸ்ரீஹரிக்கு அர்ப்பிக்க வேண்டும் என்பது அனைத்து ஆசிரமங்களுக்கும் பொருந்தும் என்று அறிய வேண்டும். ‘ஓம் விஹிதத்வாச்சாஸ்ரம கர்மாபி ஓம்’ என்னும் பிரம்ம சூத்திரத்தில், அபரோக்ஷ ஞானியும்கூட தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை தவறாமல் செய்யவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
****
No comments:
Post a Comment