[பத்யம் #57] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #57]
ஹலவு ஜன்மதொ3ளலவ போ3த4ர
செலுவ மதவனு பொந்தி3 ப3ருதலி
ஹலத4ரானுஜனன்னு பூஜிஸி ஹலவு ஜன்மத3லி |
ஹலவு ஜன்மத3 த்4யான ஜபதப
ஹலவு ஜன்மத3 புண்யராஶியு
மிளிதவாகு3வ ப2லிஸித3ல்லதெ3 தொ3ரகத3ங்கிதவு ||57
ஹலவு ஜன்மதொளு - பற்பல பிறவிகளில்; அலவ போதர - ஸ்ரீமன் மத்வாசார்யரின்; செலுவ மதவனு - சிறந்த மதத்தை; பொந்தி பருதலி - அடைந்து வருவது என்பது; ஹலவு ஜன்மதலி - பற்பல பிறவிகளில்; ஹலதரானுஜனன்னு பூஜிஸி - பலராமனின் தம்பியான ஸ்ரீகிருஷ்ணனை பூஜித்து; ஹலவு ஜன்மத - பற்பல பிறவிகளில் செய்த; த்யான ஜபதப - தியான ஜபதப (அவற்றின் பலனால்); ஹலவு ஜன்மத - பற்பல பிறவிகளில் சேர்ந்த; புண்யராஷியு - புண்ணியங்கள்; மிளிதவாகுவ - இவை அனைத்தும் சேர்ந்ததாலேயே; பலிஸிது - பலித்தது; அல்லதெ - (இவ்வாறு) இல்லையெனில்; தொரகதங்கிதவு - அங்கிதம் கிடைக்காது.
அங்கிதம் கிடைப்பதற்கான தகுதிகளை ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர் இந்த பத்யத்தில் விளக்குகிறார்.
பற்பல பிறவிகளில், ஸ்ரீமன் மத்வாசார்யரின் சிறந்த மதத்தை அடைந்து வருவது என்பது, பற்பல பிறவிகளில் பலராமனின் தம்பியான ஸ்ரீகிருஷ்ணனை பூஜித்து, பற்பல பிறவிகளில் செய்த தியான ஜபதபங்களை செய்து, அவற்றின் பலனால் சேர்ந்த புண்ணியங்களாலேயே, இந்த பிறவியில் அங்கிதம் கிடைத்திருக்கிறது. இல்லையேல் கிடைத்திருக்காது.
ஏஸு காயங்கள களெது எம்பத்னால்கு லக்ஷ
ஜீவ ராஷியன்னு தாடி பந்த ஈ ஷரீர
(தாஸனாகு விஸேஷனாகு - ஸ்ரீகனகதாஸர்)
இவ்வளவு நீண்ட பயணத்தினை செய்து வந்திருக்கும் இந்த தேகமானது, அர்த்தமானதாக ஆகவேண்டுமெனில், தாஸன் ஆகவேண்டும் - என்கிறார் ஸ்ரீகனகதாஸர்.
அந்தந்த பிறவிகளில் சேர்த்த புண்ணியங்களாலேயே, இந்தப் பிறவியில் அங்கிதம் கிடைத்திருக்கிறது என்பதை விளக்குகிறார் ஸ்ரீதாஸர்.
***
No comments:
Post a Comment