[பத்யம் #56] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #56]
க3ருவிகெய மாதல்ல ஹிரியரு
அரஸி நோட3லிப3ஹது3 யதிக3ளு
த4ரிஸுதா1ஸ்ரமநாம தா3ஸரு ஹரிய அங்கிதவ |
மெரெத3ரல்லதெ3 எரடு3 பக்ஷதி3
நெரெ பரம்பரெயிந்த3 ஸித்3த4வு
கு3ருப்ரஸாத3தொ3ளதி4க1வெனிபுது3 ஸதத ஸுக2வித்து ||56
கருவிகெய மாதல்ல - இது கர்வத்தினால் சொல்லப்பட்ட விஷயம் அல்ல; ஹிரியரு அரஸி நோடலிபஹுது - பெரியவர்கள் ஆராய்ந்து பார்த்து அறியலாம்; யதிகளு ஆஸ்ரம நாம - யதிகள் தங்களின் ஆசிரம நாமத்தையும்; தாஸரு ஹரிய அங்கிதவ - ஹரிதாஸர்கள் ஹரியின் அங்கிதத்தை; தரிஸுத - தரித்தவாறு; மெரெதரு - திகழ்ந்தனர் (இருந்தனர்); அல்லதெ - இதனால்; எரடு பக்ஷதி - இரு வழிகளிலும்; நெரெ பரம்பரெயிந்த - வளர்ந்து வந்த பரம்பரையினால்; ஸதத ஸுகவித்து - நிரந்தரமான சுகத்தைக் கொடுத்து; குருப்ரஸாததொளு - குருகளின் பிரஸாதத்தில்; அதிகவெனிபுது - இது உயர்ந்த நிலை என்பது; ஸித்தவு - இது நிச்சயமாகிறது;
அங்கித நாமத்தின் சிறப்பினை விளக்கியவாறு, ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர், அதனை யதிகளின் ஆசிரம நாமத்துடன் ஒப்பிட்டு சொல்கிறார்.
இது கர்வத்தினால் சொல்லப்பட்ட விஷயம் அல்ல. கற்றறிந்தவர்கள் ஆராய்ந்து பார்த்து அறியலாம். யதிகள் தங்களின் ஆசிரம நாமத்தையும், ஹரிதாஸர்கள் தங்களின் அங்கித நாமத்தையும் தரித்தவாறு, திகழ்ந்தனர். இந்த இரு வழிகளிலும் (யதி பரம்பரை, ஹரிதாஸ பரம்பரை) வளர்ந்து வந்த பரம்பரையால், அவரவர்களுக்கு அது நிரந்தரமான சுகத்தைக் கொடுத்தது. குருகளின் பிரஸாதத்தினால் இதுவே உயர்ந்த நிலை என்பது நிச்சயமாகிறது.
***
No comments:
Post a Comment