[பத்யம் #66] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #66]
தத்வதொ3ளு மனபோகி3ஸி ஸ்ரீஹரி
க்ருத்யவனு நெனெனெனெது3 ஹர்ஷோ
ந்மத்தனாகு3த ப்4ருத்யபா4வதி3 உத்தமோத்தமன |
ஹெத்த1வரிக3தி4கத3லி ப்ரீதிஸி
சித்த நிர்மலனாகி3 ப4க்திலி
நித்யத3லி பா4விஸுதலிர்புதெ3 ஞான லக்ஷணவு ||66
தத்வதொளு மனபோகிஸி - பகவந்தனின் தத்வங்களில் மனதை ஈடுபடுத்தி; ஸ்ரீஹரி க்ருத்யவனு - ஸ்ரீஹரியின் செயல்களை; நெனெனெனெது - திரும்பத் திரும்ப நினைத்து; ஹர்ஷோன்மத்தனாகுத - மிக அதிகமான மகிழ்ச்சியில் திளைத்தவாறு; ப்ருத்யபாவதி - தாஸ்ய பாவத்துடன்; உத்தமோத்தமன - சர்வோத்தமனான ஸ்ரீஹரியை; ஹெத்தவரிகதிகதலி - தன்னைப் பெற்றவர்களைவிட அதிகமாக; ப்ரீதிஸி - அன்பு செலுத்தி; சித்த நிர்மலனாகி - சுத்தமான மனதுடன்; பக்திலி - பக்தியுடன்; நித்யதலி - தினம்தோறும்; பாவிஸுதலிர்புதெ - இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் இருப்பதே; ஞான லக்ஷணவு - உண்மையான ஞானத்தின் லட்சணம் ஆகும்.
ஞானத்தின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீராமகாந்த விட்டல தாஸர்.
பகவந்தனின் தத்வங்களில் மனதை ஈடுபடுத்தி, ஸ்ரீஹரியின் செயல்களை திரும்பத்திரும்ப நினைத்தவாறு, மிக அதிகமான மகிழ்ச்சியில் திளைத்தவாறு, தாஸ்ய பாவத்துடன் ஸர்வோத்தமனான ஸ்ரீஹரியை, தன்னைப் பெற்றவர்களைவிட அதிகமாக அன்பு செலுத்தி, சுத்தமான மனதுடன், பக்தியுடன் தினம்தோறும் இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் இருப்பதே, உண்மையான ஞானத்தின் லட்சணம் ஆகும்.
***
No comments:
Post a Comment