[பத்யம் #79] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #79]
மனுஜ ஸாமான்யரிகெ3 பேளித3
இனிதுபாயவு ஸல்வுதி3த3ரொளு
மனவ நிக்3ரஹிஸுவனு ஞானியு தத்வவனு க்3ரஹிஸி |
அனுப4விப விஷயதொ3ளு ஹரி இ
த்3த3னுப4விஸி நிர்லேப மனதொ3ளு
உணிஸுதனப4வகீவனென்னுத ஸதத திளியுவனு ||79
பேளித - மேலே கூறிய; இனிதுபாயவு - இந்த உபாயங்கள் (வகைகள்); மனுஜ ஸாமான்யரிகெ - பாமர மனிதர்களுக்கு; ஸல்வுது- பொருந்துகிறது; இதரொளு - இதில்; மனவ நிக்ரஹிஸுவனு - மனதை கட்டுப்படுத்துபவன்; ஞானியு - ஞானி எனப்படுகிறான்; தத்வவனு - மத்வ மதத்தின் தத்வங்களை; க்ரஹிஸி - புரிந்துகொண்டு; அனுபவிப விஷயதொளு - தான் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்திலும்; ஹரி இத்து - ஸ்ரீஹரி இருக்கிறான் என்று அறிந்து; அனுபவிஸி - அந்த அனுசந்தானத்துடன் அனுபவித்து; நிர்லேப மனதொளு - பட்டும் படாமலும் ஆன மனதுடன்; உணிஸுதன - உண்பவனுக்கு; பவகீவனென்னுத - (அதன் பலன்களை) அவனுக்கு கொடுக்கிறான் என்று; ஸதத திளியுவனு - (ஞானியானவன்) எப்போதும் அறிகிறான்.
இவ்வாறு கூறிய இந்த வகைகள், பாமர மக்களுக்கு சரியாக பொருந்துகின்றன. இவற்றை செய்து, மனதை கட்டுப்படுத்துபவன், ஞானி எனப்படுகிறான். மத்வ மதத்தின் தத்வங்களை புரிந்துகொண்டு, தான் அனுபவிக்கும் விஷயங்கள் அனைத்திலும் ஸ்ரீஹரி இருக்கிறான் என்று அறிந்து, அந்த அனுசந்தானத்துடன், நிர்லேபமான மனதுடன் இருப்பவனுக்கு, ஸ்ரீஹரி அதன் பலன்களை அவனுக்கே கொடுக்கிறான்.
அனுப4வக்கெ தந்து3கோ ஸகல ஸா
த3னக3ளொளகி3து3 முக்2ய பாமர
மனுஜரிகெ3 பேளித3ரெ திளியது3 பு3த4ரிக3ல்லத3லெ ||16
மனதால், வாக்கினால், தேகத்தால் செய்யும் அனைத்து காரியங்களையும், ஸ்ரீபரமாத்மனுக்கு செய்யப்படும் பிரதட்சிணை என்று நினைத்து, அவற்றை ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து, மகிழ்ச்சி அடைந்துகொண்டிரு. இந்த விஷயங்களை சொல்லிப் பலனில்லை. அனுபவத்திற்குக் கொண்டு வா. முக்திக்கு இதைவிட சாதனை என்று எதுவும் இல்லை. ஆனால், இது சாதாரண மக்களின் மனதிற்கு புரிவது கஷ்டம். ஞானிகளுக்கு மட்டுமே புரியும் விஷயம் இது. அஞ்ஞானிகளுக்கு உபதேசம் செய்து என்ன பலன்? என்று உதாசீனம் செய்யவேண்டாம். புரியாத விஷயங்களை, குருகளிடமிருந்து அறிந்து, அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதே ஸ்ரீஜகன்னாததாஸரின் கருத்து.
***
No comments:
Post a Comment