[பத்யம் #77] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #77]
மனவ நிக்3ரஹிஸத3லெ மாடு3வ
க4னத1பவு ஜபதா3ன மௌனக3
ளினிது1 டா3ம்பீ4கவெனிஸி வ்யர்த்த2தி3 போபுத3னு திளிது3 |
க்ஷண பி3ட3தெ3 ஹரி பாத3 பத்3மதி3
அனுனயதி3 மனெமாடி3 நிலிஸுத
அனுப4வத3 ஸாத4னதி3 ஸாதி4ஸு த்4யானகோ3சரன ||77
மனவ - மனதினை; நிக்ரஹிஸதலெ - அடக்காமலேயே; மாடுவ - செய்யப்படும்; கனதபவு - கடுமையான தவம்; ஜபதான - ஜபம், தானம்; மௌனகளு - மௌன விரதங்கள்; இனிது - இவை; டாம்பீகவெனிஸி - ஆடம்பரம் எனப்பட்டு; வ்யர்த்ததி - வீணாக; போபுதனு - செல்கின்றன என்பதை; திளிது - அறிந்து; க்ஷண பிடதெ - ஒரு நொடியும் விடாமல்; ஹரிபாத பத்மதி - ஹரி பாத பத்மங்களில்; அனுனயதி மனெமாடி நிலிஸுத - இடைவிடாமல் நிலை நிறுத்தி; அனுபவத - அந்த அனுபவத்தின்; ஸாதனதி - ஸாதனத்தினால்; த்யானகோசரன - தியானத்தினால் கண்டறியப்படுபவனை; ஸாதிஸு - கண்டறிவாயாக (அடைவாயாக).
பிம்பரூப தரிசனத்தின் வழிமுறையை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
மனதினை அடக்காமல் செய்யப்படும் கடுமையான தவம், ஜபம், தானம், மௌன விரதங்கள் ஆகியவை, ஆடம்பரம் எனப்பட்டு, வீணாகப் போகின்றன என்பதை அறிந்து, ஒரு நொடியும் விடாமல் ஹரிபாத பத்மங்களில் மனதினை இடைவிடாமல் நிலை நிறுத்தி, அந்த அனுபவத்தின் ஸாதனத்தினால், தியானத்தினால் கண்டறியப்படுபவனை கண்டறிவாயாக.
மனதில் பகவந்தனை நிறுத்தி, செய்யப்படும் காரியங்களால் ஆகும் பலன்களை ஸ்ரீஜகன்னாததாஸர், இந்த ஹரிகதாம்ருத பத்யத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்.
ஹலவு ப3கெ3யலி ஹரிய மனத3லி
ஒலிஸி நில்லிஸி ஏனு மாடு3வ
கெலஸக3ளு அவனங்க்4ரி பூஜெக3ளெந்து3 நெனெவுதிரு |
ஹலத4ரானுஜ தானெ ஸர்வ
ஸ்த2லக3ளலி நெலெஸித்து3 நிஸ்ச
ஞ்சல ப4கு3தி ஸுக்3ஞான பா4க்3யவ கொட்டு ஸந்தெயிப ||28
அனைத்து விதங்களிலும் பரமாத்மனிடம் திடமான பக்தியை வைத்து, அந்த பக்தியினால் பரமாத்மன் தரிசனம் கொடுப்பது போல செய்து, சஞ்சலமற்ற மனதுடன் பரமாத்மனை நிறுத்தி, நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் பரமாத்மனின் பூஜை என்றே நினைத்திரு. இப்படி செய்வதால், ஸ்ரீகிருஷ்ணன் தானே அனைத்து இடங்களிலும் இருந்து, நீ செய்யும் அனைத்து செயல்களையும் தன் பூஜையென்றே ஏற்றுக்கொண்டு, சிறந்த பக்தியை, திவ்யஞான செல்வத்தைக் கொடுத்து உனக்கு அருள்வான் என்று தாசராயர் அன்புடன் சஜ்ஜனர்களுக்கு உபதேச ரூபமாக சொல்லியிருக்கிறார்.
***
Dhanyavadjiद~यवॉद
ReplyDelete