Wednesday, July 27, 2022

[பத்யம் #76] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #76] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #76]

இந்தி3ரேஷன ஞானயோக3கெ

3ந்த4னங்க3ளனெல்ல நீக3லு

இந்த்3ரியங்க3 ஜயிஸு மொத3லிகெ3 நியமவ்ரததி3ந்த3 |

குந்த33லெ அடி33டி3கெ3 மனவனு

4ந்தி3ஸுத ஸச்சாஸ்த்ர ஸ்ரவணதி3

பொந்தி3 ஶாந்த பிரஸன்ன சித்தவ தா3டு1 4வஸிந்து4 ||76 

இந்திரேஷன - ஸ்ரீஹரியின்; ஞானயோககெ - ஞானத்தை அடைவதற்கு; பந்தனங்களனெல்ல - அதற்குண்டான தடைகள் அனைத்தும்; நீகலு - நீங்குவதற்கு; மொதலிகெ - முதன்முதலில்; நியமவ்ரததிந்த - விதிப்படி செய்யப்படும் விரதங்களால்; இந்திரியங்கள - இந்திரியங்களை; ஜெயிஸு - ஜெயிப்பாயாக; அடிகடிகெ - அவ்வப்போது; மனவனு - மனதினை; குந்ததலெ - எவ்வித தடைகளும் இன்றி; பந்திஸுத - கட்டுப்படுத்தியவாறு; ஸச்சாஸ்த்ர ஸ்ரவணதி - நற்சாஸ்திரங்களை கேட்டவாறு; ஷாந்த - அமைதியான; பிரஸன்ன - மகிழ்ச்சியான; சித்தவ - மனதினை; பொந்தி - அடைந்து; பவஸிந்து - சம்சாரக் கடலை; தாடு - தாண்டுவாயாக. 

ஸ்ரீஹரியைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு, அதற்குண்டான தடைகள் அனைத்தும் நீங்குவதற்கு, முதன்முதலில் விதிப்படி செய்யப்படும் விரதங்களால், இந்திரியங்களை ஜெயிப்பாயாக. அவ்வப்போது மனதினை, எவ்வித தடைகளும் இன்றி, கட்டுப்படுத்தியவாறு, நற்சாஸ்திரங்களை கேட்டவாறு, அமைதியான மகிழ்ச்சியான மனதினை அடைந்து, அதன் பலனாக சம்சாரக் கடலினை தாண்டுவாயாக. 

மனதினை கட்டுப்படுத்தும் விஷயத்தைப் பற்றி ஸ்ரீஜகன்னாததாஸர், ஹரிகதாம்ருதஸாரத்தின் ஒரு பத்யத்தில் இவ்வாறு கூறுகிறார். 

ஸித்தி4யெனிஸுவ ஸங்கருஷண ப்ர

ஸித்த4னாமக வாஸுதேவ

வத்3 ரூப சதுஷ்டயக3ளரிதவனெ பண்டிதனு ||6 

அனைத்து இந்திரியங்களுக்கும் மனமே காரணம். பத்து இந்திரியங்களின் செயல்கள் நடைபெற வேண்டுமெனில், மனஸ் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. மனோ நிக்ரஹத்தினாலேயே மனிதன், ஜிதேந்திரியன் என்று ஆகிறான். மனோ நிக்ரஹம் செய்யாமல், தன் இஷ்டம் போல செயல்களை செய்பவன் பாவியாகிறான். இத்தகைய மனதைக் கட்டுப்படுத்தும் விஷயங்களில், வாசுதேவ நாமக பரமாத்மன் இருந்து, பிரசித்தன் என்னும் பெயரைப் பெறுகிறான்.

****

No comments:

Post a Comment