[பத்யம் #58] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #58]
ஏஸு பேளுவதே3னு விட்டலன
தா3ஸனெனிஸாலஸ்ய மாட3தெ3
தா3ஸவர்யர த3யவ க3ளிஸுத க்லேஶவீடா3டு3
தா3ஸனாக3தெ3 ஒலிய ஸ்ரீ கம
லேஶனெம்பு3த3 திளிது3 பா4வதி3
தா3ஸ பி3ருத3னு த4ரிஸலப்புது3 நாஶரஹித ஸுக2 ||58
ஏஸு - எவ்வளவுதான்; பேளுவதேனு - சொன்னால் என்ன?; விட்டலன - ஸ்ரீவிட்டலனின்; தாஸனெனிஸு - தாஸன் என்று சொல்; ஆலஸ்ய மாடதெ - எவ்வித தயக்கமும் இன்றி; தாஸவர்யர தயவ களிஸுத - ஸ்ரீவாயுதேவரின் அருளை விரும்பியவாறு; க்லேஷவீடாடு - சந்தேகத்தை விட்டுவிடு; தாஸனாகதெ ஒலிய - தாஸன் ஆகாமல் மகிழ மாட்டான்; ஸ்ரீகமலேஷ - ஸ்ரீஹரி; எம்புத திளிது - என்பதை அறிந்து; பாவதி - மகிழ்ச்சியுடன் (பெருமையுடன்); தாஸ பிருதனு - அங்கிதத்தை; தரிஸலு - ஏற்றுக் கொண்டால்; நாஷரஹித ஸுக - அழிவில்லா சுகம் (மோட்சம்); அப்புது - கிடைக்கிறது.
எவ்வித தயக்கமும் இன்றி, ஸ்ரீவிட்டலனின் தாஸன் நான் என்று சொல். ஸ்ரீவாயுதேவரின் அருளை விரும்பியவாறு, நாம் அவனின் தாஸன் ஆகாமல் மகிழ மாட்டான் ஸ்ரீஹரி என்பதை அறிந்து, மகிழ்ச்சியுடன் (பெருமையுடன்), அங்கிதத்தை ஏற்றுக் கொண்டால், அழிவில்லா சுகம் (மோட்சம்) கிடைக்கிறது.
ஆஷ க்லேஷ தோஷவெம்ப அர்த்தியொளு முளுகி
யமன பாஷக்கொளகாகதெ நிர்தோஷி ஆகு ஸந்தோஷி ஆகு
(தாஸனாகு விஸேஷனாகு)
ஆசை, துக்கம் ஆகிய தோஷங்களில் சிக்கிக் கொள்ளாமல், நிர்தோஷனாக இருந்து, ஸ்ரீஹரியின் தாஸன் ஆக வேண்டும் - என்று அறிவுறுத்துகிறார் ஸ்ரீகனகதாஸர்.
***
No comments:
Post a Comment