[பத்யம் #69] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #69]
வாரிஜோத்ப4வ ஜனக விஶ்வா
தா4ரகன ஸ்வாதந்த்ர்யகு3ண வ்யா
பார விஸ்தாரத3லி திளியுத விஷயபோ4க3க3ள |
ஸார நிஸ்ஸாரவனு கனஸிலி
தாரத3லெ அனுப4விஸி நர ஸம்
ஸார மத்4யதி3 நலிது3 சரிபுதெ3 பரம வைராக்3ய ||69
வாரிஜோத்பவ ஜனக - தாமரையில் பிறந்தவரான பிரம்மனின் தந்தையான ஸ்ரீஹரியின்; விஷ்வாதாரகன - இந்த உலகிற்கே ஆதாரமான ஸ்ரீஹரியின்; ஸ்வாதந்த்ர்யகுண - ஸ்வாதந்த்ர்ய குணங்களை; வ்யாபார - அவனுடைய செயல்களை; விஸ்தாரதலி திளியுத - மிகவும் விளக்கமாக / ஆழமாக அறிந்தவாறு; விஷயபோககள - நாம் அனுபவிக்கும் விஷய சுகங்களை; ஸார நிஸ்ஸாரவனு - ஸாத்விக, அஸாத்விகமான எவ்வித பொருட்களையும்; கனஸிலி தாரதலெ - கனவில்கூட நினைக்காமல்; அனுபவிஸி - அவற்றை (நிர்லிப்தமாக) அனுபவித்து; நர ஸம்ஸார மத்யதி நலிது - இந்த ஸம்ஸாரத்தின் நடுவில் வசித்து; சரிபுதே - இருப்பதே; பரம வைராக்ய - பரம வைராக்கியம் எனப்படுகிறது.
வைராக்கியத்தின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
தாமரையில் பிறந்தவரான பிரம்மனின் தந்தையான ஸ்ரீஹரியின் ஸ்வாதந்த்ர்ய குணங்களை, அவனுடைய செயல்களை மிகவும் விளக்கமாக / ஆழமாக அறிந்தவாறு, நாம் அனுபவிக்கும் விஷய சுகங்களை ஸாத்விக, அஸாத்விகமான எவ்வித பொருட்களையும் கனவில்கூட நினைக்காமல், அவற்றை நிர்லிப்தமாக அனுபவித்து, இந்த ஸம்ஸாரத்தின் நடுவில் வசித்து இருப்பதே, பரம வைராக்கியம் எனப்படுகிறது.
வைராக்ய ஸுளாதில், ஸ்ரீகோபாலதாஸர் வைரக்கியத்தின் பல்வேறு லட்சணங்களை ஒரு பெரிய பட்டியலாகக் கொடுத்திருக்கிறார்.
நீரு ஒளகெ3 இன்னு கமல வித்த3ந்தெ
காரணனாகி3 கார்ய வில்லத3லிரபே3கு
மார ஜனக நம்ம கோபாலவிட்டலனு
தோரி கொட்ட வைராக்3யவனெ தோருவெ ||1
தாமரை இலை தண்ணீரைப் போல சம்சாரத்தில் இருந்து, எவ்வித பலன்களையும் எதிர்பார்க்கமல் கர்மங்களை செய்தவாறு, நம் கோபாலவிட்டலனை நினைத்தால், அவனே நமக்கு வைராக்கியத்தைக் கொடுக்கிறான்.
வைராக்யஸாலி என்று சொல்லிக் கொண்டு சிலர் செய்யும் செயல்களை இந்தப் பாடலில் கேலி செய்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர்.
நானு எம்புது பிட்டு ஞானிகளொடனாடி ஏனாதரு ஹரி ப்ரேரணெயெந்து
த்யானிஸி மௌனதி புரந்தர விட்டலன்ன காணதெ மாடித கார்யகளெல்லவு
(உதர வைராக்யவிது)
* நான், எனது என்னும் சிந்தனையை விடவேண்டும்
* ஞானிகளுடன் பழகியவாறு இருக்க வேண்டும்
* என்ன பலன் கிடைத்தாலும் அது ஹரி ப்ரேரணை என்று நினைக்க வேண்டும்
* தியானத்தினால், மௌனத்தினால் புரந்தர விட்டலனை காண வேண்டும்
-- இவ்வாறு செய்யாத காரியங்கள் அனைத்தும் தற்காலிக வைராக்கியம் மட்டுமே என்கிறார் ஸ்ரீபுரந்தரதாஸர்.
***
No comments:
Post a Comment