[பத்யம் #65] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம்
#65]
இல்ல இன்னித3கதி4க கர்மவு
ப3ல்லித3ரு விதி4ஸுதலி பேளிஹ
சில்லரெய நிஷ்காம கர்மகெ ப2லத3 ரூபத3லி |
புல்லலோசன கடெ3யலீவனு
நில்லத3லெ ஶ்ரவணாதி3 ஸாத4ன
ஸல்லிஸதெ3 ஸம்யஞான ஒலியனு ஸத்யஸங்கல்ப ||65
விதிஸுதலி - விதிப்படி; இன்னிதகதிக கர்மவு இல்ல - இதைவிட வேறு கர்மங்கள் எவையும் இல்லை; பல்லிதரு பேளிஹ - அறிந்தவர்கள் கூறுகின்றனர்; சில்லரெய நிஷ்காம கர்மகெ - இப்படியாக செய்யப்படும் நிஷ்காம கர்மத்திற்கு; புல்லலோசன - மலர்களைப் போன்ற கண்களைக் கொண்டவன் (ஸ்ரீஹரி); கடெயலீவனு - கடைசியாக கொடுக்கிறான்; நில்லதலெ - இடைவிடாமல்; ஸ்ரவணாதி ஸாதன - ஸ்ரவண, மனன, தியான ஆகிய ஸாதனைகளை; ஸல்லிஸதெ - செய்யாமல்; ஸம்யஞான ஒலியனு - யதார்த்த ஞானத்தை (சரியான ஞானத்தை); ஒலியனு - கொடுக்க மாட்டான்; ஸத்யஸங்கல்ப - ஸத்யஸங்கல்பனான ஸ்ரீஹரி.
இதைவிட (மேற்கூறியதைத் தவிர) வேறு கர்மங்கள் எவையும் இல்லை என அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இப்படியாக செய்யப்படும் நிஷ்காம கர்மத்திற்கு, மலர்களைப் போன்ற கண்களைக் கொண்ட ஸ்ரீஹரி, கடைசியில் முக்தியைக் கொடுக்கிறான். இடைவிடாமல் சிரவண, மனன, தியானம் ஆகிய ஸாதனைகளை செய்யாமல், யதார்த்த ஞானத்தை, ஸத்ய ஸங்கல்பனான ஸ்ரீஹரி கொடுக்க மாட்டான்.
ஸ்ரீவிஜயதாஸர் தனது ஸதாசார ஸுளாதியில் இவ்வாறு கூறுகிறார்.
எரடொந்து உள்ளமேலு: ஸ்ரவண, மனன, நிதித்யாஸன என்னும் மூன்றும் மோட்சத்திற்கான உத்தம சாதனைகள். சிரவணாதிகள் இல்லாமல் ஒரு நொடியும் இருக்கக்கூடாது.
சாஸ்திர ஜன்ய ஞான - உபதேசத்தினால் உண்டாவது சிரவணம். வாக்யார்த்தங்களில் யுக்திகளை பயன்படுத்துவதி மனனம். பகவத் விஷயக விஷயங்கள் நிரந்தரமாக செய்து கொண்டிருப்பது - நிதித்யாஸனம்.
அடுத்த 4 பத்திகளில், ஞான, விக்ஞான, பக்தி, வைராக்கியங்களைப் பற்றியும், அவற்றின் லட்சணங்களைப் பற்றியும் தனித்தனியே விளக்குகிறார் ஸ்ரீதாசர்.
**
No comments:
Post a Comment