Friday, July 29, 2022

[பத்யம் #78] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #78] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் 78]

அடி33டி3கெ3 ஹரிதோ3டு3திஹ மன

தடெ3து3 3ஹு கஷ்டத3லி நில்லிஸி

பி33தெ3 அப்4யாஸத3லி ஸாதி4பதொ3ந்து3 3கெ3 மத்தெ |

நடு3கு3தலி து3ர்விஷய போ43க்கெ

எட3பி33தெ3 ஸத்3விஷய மாத்ரவ

த்4ருட3தி3 பு4ஞ்சிஸி ஹரிகெ3 அர்ப்பிப 3கெயு மத்தொந்து3 ||78 

அடிகடிகெ - அடிக்கடி; ஹரிதோடுதிஹ - பாய்ந்தோடும்; மன - மனதினை; பிடதெ - விட்டுவிடாமல்; பஹு கஷ்டதலி - மிகவும் கஷ்டப்பட்டு; தடெது - தடுத்து; நில்லிஸி - நிறுத்தி; அப்யாஸதலி - இப்படிப்பட்ட பயிற்சியால்; ஸாதிபதொந்து பகெ - சாதிப்பது ஒரு வகை; மத்தெ - இன்னொன்று என்னவெனில்; துர்விஷய போகக்கெ - கெட்ட விஷயங்களை செய்வதற்கு; நடுகுதலி - நடுங்கியவாறு; த்ருடதி - திட மனதுடன்; ஸத்விஷய மாத்ரவ - ஸத்விஷயங்களை மட்டுமே; எடபிடதெ - தொடர்ந்து; புஞ்சிஸி - செய்தவாறு; ஹரிகெ அர்ப்பிப - அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வது; மத்தொந்து பகெயு - இன்னொரு விதமாகும். 

மனதினை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த பத்யத்தில் அழகாக விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

அங்கங்கே அலைபாயும் மனதினை, விட்டுவிடாமல், மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி செய்து, மனதினை தடுத்து நிறுத்துவது ஒரு வகை. இன்னொன்று என்னவெனில், கெட்ட விஷயங்களை செய்வதற்கு, நடுங்கியவாறு, திட மனதுடன், ஸத்விஷயங்களை மட்டுமே தொடர்ந்து செய்தவாறு, அனைத்தையும் ஸ்ரீஹரிக்கு அர்ப்பணம் செய்வது இன்னொரு விதமாகும். 

மன வசன காய ப்ரத3க்ஷணெ

அனுதி3னதி3 ஸர்வத்ர வியாபக

வன ருஹேக்ஷண 3ர்ப்பிசுத மோதி3ஸுதலிரு ஸதத | 

மனதால், வாக்கினால், தேகத்தால் செய்யும் அனைத்து காரியங்களையும், ஸ்ரீபரமாத்மனுக்கு செய்யப்படும் பிரதட்சிணை என்று நினைத்து, அவற்றை ஸ்ரீபரமாத்மனுக்கு அர்ப்பித்து, மகிழ்ச்சி அடைந்துகொண்டிரு. இந்த விஷயங்களை சொல்லிப் பலனில்லை. அனுபவத்திற்குக் கொண்டு வா. முக்திக்கு இதைவிட சாதனை என்று எதுவும் இல்லை - என்று ஹரிகதாம்ருதஸாரத்தில் ஸ்ரீஜகன்னாததாஸர் கூறுகிறார்

***


No comments:

Post a Comment