[பத்யம் #53] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #53]
ஜனும த4ரிஸித3மேலெ தன்னய
தனுவ லாலிஸி தந்தெ3தாய்க3ளு
அனுனயதி3 பெஸரிடு3த கரெவுது3 லோக வ்யவஹார |
ருணதொ3ள்ஹுட்டித3 ருணத3 நாமவு
தனுவினொந்தி3கெ3 போபுத3ல்லதெ3
இனிது ஸத்க3திகெ3ணிகெயாக3து3 ப4வவ தொலகி3ஸது3 ||53
ஜனும தரிஸிதமேலே - இந்தப் பிறவியை எடுத்தபின்; தன்னய தனுவ லாலிஸி - தன் தேகத்தை வளர்த்து; தந்தெதாய்களு - பெற்றோர்; அனுனயதி - பிடித்த மாதிரியான; பெஸரிடுத - பெயரை வைத்து; கரெவுது - அழைப்பது; லோக வ்யவஹார - உலகத்து நடைமுறை வழக்கமாகும்; ருணதொள்ஹுட்டித - ருணத்தினால் பிறந்த ; ருணத நாமவு - இந்த ருணத்தின் பெயர்; தனுவினொந்திகெ - இந்த உடம்புடனேயே; போபுதல்லதெ - போய்விடுமே தவிர; இனிது ஸத்கதிகெ - இனிமையான ஸத்கதிக்கு; எணிகெயாகது - காரணம் ஆகாது; பவவ தொலகிஸது - ஸம்ஸார பந்தனத்தை விடுவிக்காது.
நம்முடைய வ்யவஹார பெயருக்கும், அங்கிதத்திற்குமான வித்தியாசத்தை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர்.
இந்தப் பிறவியை எடுத்தபின், இந்த தேகத்தை நம் பெற்றோர் வளர்த்து, தமக்குப் பிடித்தமான பெயரை வைத்து, அழைப்பது உலக நடைமுறை வழக்கமாகும். ஜீவர்களின் ப்ராரப்த கர்மங்களுக்கேற்ப, அந்த ருணங்களால் பிறந்து, வைக்கப்பட்ட இந்தப் பெயர், இந்த உடம்பு மறைந்தவுடன் போய்விடுகிறது. தக்க ஸத்கதிக்கு இது காரணம் ஆகாது. இந்த (வ்யவஹார) பெயர், ஸம்ஸார பந்தனத்தை விடுவிக்காது.
அங்கிதப் பெயரானது, நமக்குள் இருக்கும் பிம்பமூர்த்தியின் பெயர் என்பதை பார்த்தோம். அதுவே ஸாதனைக்கான, முக்திக்கான மார்க்கத்தில் உதவும் பெயர் ஆகும். ஸம்ஸார பந்தனத்தை விடுவிக்கும் பெயர் ஆகும். பிம்ப அபரோக்ஷத்திற்காக, நாம ஜபம் செய்வதற்கு தக்க பெயர் அதுவே (அங்கிதம்) ஆகும் என்பதையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார் ஸ்ரீதாஸர்.
அத்தகைய அங்கிதப் பெயர் இல்லாமல், நமக்கு பிறந்ததும் வைக்கப்பட்ட, அனைவராலும் அழைக்கப்படும் நமது வ்யவஹார பெயர் அதற்கு (முக்திக்கு / பிம்ப அபரோக்ஷத்திற்கு / ஸம்ஸார பந்தனத்தை விடுவிப்பதற்கு) உதவாது என்கிறார்.
***
No comments:
Post a Comment