Thursday, July 14, 2022

[பத்யம் #64] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

[பத்யம் #64] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]

இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)

தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

***

[பத்யம் #64]

மேலெனிப ஸுக்3ஞான ப்ராப்திகெ3

மூலகாரண ஶ்ரவணவெனிபுது3

கேளதி3ருவரெ ஞானவில்லதெ3 த்4யானவேனெந்து3

ஶீ ஸத்கு3ருக3ளனு ஸேருத1

மேலெ மேலெட3பி33தெ3 ஸேவிஸி

பேள்வ தத்வரஹஸ்ய லாலிஸி மனன மாடு3வுது3 ||64 

மேலெனிப - மேற்கூறிய; ஸுக்ஞான ப்ராப்திகெ - யதார்த்த ஞானத்தைப் பெறுவதற்கு; மூலகாரண - மூல காரணம்; ஷ்ரவணவெனிபுது - சிரவணமே ஆகும்; (இப்படியிருக்கையில்); த்யானவேனெந்து - தியானம் என்றால் என்ன என்று; ஞானவில்லதே - புத்தி இல்லாமல்; கேளதிருவரெ - கேட்காமல் இருப்பார்களா? (கேட்பார்கள்). ஷீல ஸத்குருகளனு - சிறந்த நல்ல குருகளை; ஸேருத- சேர்ந்தவாறு; மேலே மேலே - பல முறை; எரபிடதெ - தொடர்ந்து இடைவிடாமல்; ஸேவிஸி - அவரை வணங்கி; பேள்வ - அவர் கூறும்; தத்வரஹஸ்ய - தத்வ ரகசியங்களை; லாலிஸி - கேட்டு, புரிந்து கொண்டு; மனன மாடுவுது - மனனம் செய்ய வேண்டும். 

சிரவண, மனனத்தின் சிறப்புகளை தொடர்ந்து இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர். 

மேற்கூறிய யதார்த்த ஞானத்தைப் பெறுவதற்கு, மூல காரணம், சிரவணமே ஆகும். இப்படியிருக்கையில், தியானம் என்றால் என்ன என்று அறிவில்லாமல் யாராவது கேட்பார்களா?. சிறந்த நல்ல குருகளை சேர்ந்து, பல முறை தொடர்ந்து இடைவிடாமல் அவரை வணங்கி, அவர் கூறும் தத்வ ரகசியங்களை கேட்டு புரிந்து கொண்டு, மனனம் செய்ய வேண்டும். 

ஸ்ரவண கேளதவனு ஜீவச்சவவென்னி |

பவனஸ்வாமி நம்ம விஜயவிட்டல மெச்ச || 

நவவித பக்தியில் முதலில் வருவது ஸ்ரவண பக்தியே ஆகும். பகவந்தனின் மகிமையை அறிவதற்கு முக்கிய வழி ஸ்ரவணம். அப்படி ஸ்ரவணம் செய்யாதவன், உயிரோடு இருக்கும் பிணம் என்று எண்ண வேண்டும் என்கிறார் ஸ்ரீவிஜயதாஸர்.

****


No comments:

Post a Comment