[பத்யம் #68] - ஹரிதாஸ த3ர்பண [Haridasa Darpana]
இயற்றியவர்: ஸ்ரீரமாகாந்த விட்டலதாஸர் (1906-1984)
தமிழில் உரை : ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்
***
[பத்யம் #68]
த்3யுனதி3 ப்ரவஹன தெரதி3 லக்ஷ்மீ
வனிதெயரஸன ஞான பூர்வக
ஜனனி ஜனக களத்ர பா3ந்த4வ ப்ரீதிக3தி4கத3லி |
மனதொ3ளகெ3 பா4விஸுத ஒத3கு3வ
க4ன எட3ரிக3ளு கத3லெ த்4ருட3த3லி
தி3னதி3னதி3 பெச்சிஸுவ ப்ரேமவெ விமல ஸத்ப4க்தி ||68
த்யுனதி - கங்கையின்; ப்ரவஹன தெரதி - பிரவாகங்களைப் போல (தொடர்ச்சியாக, இடைவிடாமல்); லட்சுமி வனிதெயரஸன -ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனை; ஞான பூர்வக - அவனுடைய மஹிமா ஞானத்துடன்; ஜனனி ஜனக களத்ர பாந்தவ - தாய், தந்தை, கணவன்/மனைவி, உறவினர்; ப்ரீதிகதிகதலி - (அவர்களின்) அன்பினை விட அதிகமாக அன்பு செய்ய வேண்டும்; மனதொளகெ பாவிஸுத - மனதில் இவ்வாறாக நினைத்து; கன எடரிகளு கதலெ - மிகப்பெரிய தடைகள் வந்தாலும் (அவற்றை பொருட்படுத்தாமல்); த்ருடதலி - திடமாக இருந்து; தினதினதி - தினம்தோறும்; பெச்சிஸுவ - வளர்ந்து வரும்; ப்ரேமவெ - அன்பே; விமல ஸத்பக்தி - தூய்மையான பக்தி ஆகும்.
பக்தியின் லட்சணங்களை இந்த பத்யத்தில் விளக்குகிறார் ஸ்ரீரமாகாந்த விட்டல தாஸர்.
கங்கையின் பிரவாகங்களைப் போல, தொடர்ச்சியாக இடைவிடாமல், ஸ்ரீலட்சுமிதேவியின் தலைவனை, அவனுடைய மஹிமா ஞானத்துடன் அறிந்து; நம் தாய் தந்தையர்களிடம் காட்டும் அன்பினை விட அதிகமாக அன்பு செய்ய வேண்டும். மனதில் இவ்வாறாக நினைத்து, மிகப்பெரிய தடைகள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல், திடமாக இருந்து, தினம்தோறும் வளர்ந்து வரும் அன்பே, தூய்மையான பக்தி எனப்படுகிறது.
தாயி தந்தெய பிட்டு தபவ மாடலு பஹுது
தாயாதி பந்துகள பிடலு பஹுது
ராய முனிதரெ ராஜ்யவ பிடபஹுது
காயஜாபித நின்ன அடிய பிடலாரது
(தொரெது ஜீவிஸ பஹுதே ஹரி நின்ன சரணவ -- ஸ்ரீகனகதாஸர்)
தாய் தந்தை உற்றார் உறவினர் என யாரை வேண்டுமானாலும் விடலாம், ஆனால் உன் அடியை மட்டும் விடமுடியாது என்று பகவந்தனிடம் வேண்டிக் கொள்கிறார் ஸ்ரீகனகதாஸர்.
ஸ்ரீஸ்ரீபாதராஜர் கூறுவது.
பக்தி பேகு விரக்தி பேகு
ஸர்வ ஷக்தி பேகு முந்தெ முக்திய பயஸுவகெ
முக்தியை வேண்டுபவன், பக்தியை, விரக்தியை கொள்ள வேண்டும் என்கிறார்.
***
No comments:
Post a Comment