Friday, March 4, 2022

ஸ்லோகம் #10: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

ஸ்லோகம் #10: மத்வ விஜய ஸார ஸங்க்ரஹ

இயற்றியவர்: ஸ்ரீவித்யாபிரஸன்ன தீர்த்தர்

தமிழில் உரை: ‘ஜகன்னாத கேசவ’ சத்ய நாராயணன்

*** 

[ஸ்லோகம் 10]

யாரு நினகெ3 ஸஹாயகரு ஈ கோ4ரவனத3லி பேளெனலு தா

தோரித3னு வனஸத3னவல்லப4 மாரஜனகனனு |

ஸூரி ஷிவனனு கெ3லிது3 ஸபெ4யலி சாருவடுவெனிஸித3 ஸகாலதி3

மாருதன மூரனெய ரூபவு ஸ்ரேயவனு கொட3லி ||10 

கோரவனதலி - இந்த அடர்ந்த காட்டினில்; யாரு நினகெ - உனக்கு யார்; ஸஹாயகரு - உதவினார்கள்?; பேளெனலு - சொல் என்று கேட்க; வனஸதனவல்லப - காட்டில் இருந்த தலைவனான; மாரஜனகனனு - மாரஜனகனான ஸ்ரீஹரியை; தோரிதனு - காட்டினான்; ஸூரி ஷிவனனு - கற்றறிந்த சிவ பிராமணர் ஒருவரை; கெலிது - வென்று; ஸபெயலி - மக்கள் நிறைந்த சபையில்; சாருவடுவெனிஸித - திறமையான சிறுவன் எனப்பட்ட; மாருதன மூரனெய ரூபவு - வாயுதேவரின் மூன்றாம் ரூபமான இவர்; ஸகாலதி - தக்க சமயத்தில்; ஸ்ரேயவனு - வளமையை (வளர்ச்சியை); கொடலி - கொடுக்கட்டும். 

சிறுவன் வாசுதேவன் தொலைந்து போய், மறுபடி கிடைத்த சம்பவத்தை தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

இந்த அடர்ந்த காட்டினில் உனக்கு யார் உதவினார்கள் என்று தந்தை கேட்க, காட்டில் இருந்த தலைவனான, மாரஜனகனான ஸ்ரீஹரியை காட்டினான் வாசுதேவன். கற்றறிந்த சிவ பிராமணர் ஒருவரை வென்று, மக்கள் நிறைந்த சபையில் திறமையான சிறுவன் எனப்பட்டார். வாயுதேவரின் மூன்றாம் அவதாரமான இவர், தக்க காலத்தில் நமக்கு வளமையைக் கொடுக்கட்டும். 

அயி ஸுதேதமுதா ஹர தத்வதோ

நனு ஸமா கதவானஸி ஸாம்ப்ரதம் | 3-11 

வருத்தத்தில் வந்த கண்ணீரை அடக்கிய தந்தை, மகனைக் கண்டதும் வந்த ஆனந்தக்கண்ணீரை மறுபடி அடக்கினார். எப்படி யாருடன் வந்தாய்?’ என்று கேட்டார். அப்பா, தாளெகுடத்து நாராயணனே என்னுடன் வந்தான்என்ற சிறுவன் கூறினான். 

சிறுவன் வாசுதேவன், சிவ பிராமணருடன் வாதம் செய்து வென்ற மகிமை, மத்வ விஜயத்தில் 3-22 முதல் 3-27 வரை ஆறு ஸ்லோகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 

பரிஷதா நிதராம் பரிவாரித:

ஷிவபத: கில தௌத படோத்பவ: |

இஹ கதாம் கதயன் தத்ருஷே

தத: ப்ருது தியா ப்ருதுகாக்ருதினாsமுனா ||3-22 

அத கதம் கதயேதி ததா ஜனே கதிதவத்யுசிதார்த்தமுதாஹரன் |

ஸ ஸமலாஹ்யத விஸ்மயிபினரை: அபி ஸுரைர்விஜயாங்குர பூஜகை: ||3-25 

ஒரு முறை வாசுதேவன், தன் தாயுடன் ஒரு உற்சவத்திற்குச் சென்றான். அங்கு ஒரு நிகழ்ச்சி. த்யௌதபட வம்சத்தின் சிவபிராமணர் ஒருவரால் புராண சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. வாசுதேவன் தன் சந்தேகத்தைக் கேட்டான். ஹே பிராமணரே! நீங்கள் சொல்வது வியாச ஸுகர்களுக்கு ஒப்புவதில்லைஎன்றான். மக்கள் அந்த சொற்பொழிவை புறக்கணித்து, சிறுவனின் திறமையை புகழ்ந்தனர். புலிக்குட்டி கர்ஜிக்கும்போது, நரியின் கூக்குரலை யார் கேட்பார்கள்? மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, சரியான பதிலையும் கொடுத்தான். அங்கிருந்த மக்களின் மகிழ்ச்சியும், வாயுதேவரின் வெற்றியைக் கொண்டாடிய தேவர்களின் மகிழ்ச்சியும் ஒன்றானது. வாசுதேவனை அனைவரும் பாராட்டினர். பிறகு வீட்டிற்குத் திரும்பிய வாசுதேவன், அனைத்தையும் தந்தைக்கு தெரிவித்தான். யார் சொன்னது சரி என்று கேட்டான். சரியான விளக்கத்தைக் கொடுத்த மகனின் பதிலே சரி என்றதோடல்லாமல், இது தனது தலைவனான அனந்தேஸ்வரனின் மகிமையாலேயே ஆனது என்று நினைத்தார். 

இத்தகைய மகிமைகளைக் கொண்ட ஸ்ரீவாயுதேவரின் மூன்றாம் அவதாரம், நமக்கு நன்மைகளைக் கொடுக்கட்டும் என்று வாசுதேவனின் பாலலீலைகளை மேலும் அடுத்த ஸ்லோகத்தில் தொடர்கிறார் ஸ்ரீவித்யா பிரஸன்ன தீர்த்தர். 

***


No comments:

Post a Comment